ரொம்ப ரேர் கேஸ்! அது எப்படி 3 ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளாகும்? ஒடிசா காட்டில் நடந்தது என்ன?
புவனேஷ்வர்: ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து உள்ளாகி இருக்கிறது. இந்திய வரலாற்றில் பல கோர ரயில் விபத்துகள் நடந்து இருந்தாலும் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்று மோதுவது இதுவே முதல்முறை.
இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.

இதே பாதையில் வந்த இன்னொரு சரக்கு ரயிலும் அடுத்த சில நிமிடங்களில் பின்னால் மோதி தடம் புரண்டு உள்ளன. இந்த விபத்தில் 70 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
முதல்முறை : இந்திய வரலாற்றில் பல கோர ரயில் விபத்துகள் நடந்து இருந்தாலும் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்று மோதுவது இதுவே முதல்முறை. அங்கே அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாக பின்வரும் விஷயங்கள் காரணமாக பார்க்கப்படுகின்றன.
காரணம் 1 - தகவல் இல்லை - கோரமண்டல் ரயில் தடம் புரண்டது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. காட்டு பகுதி என்பதால் சிக்னல் இல்லை. இதனால் அதிகாரிகளுக்கு விவரம் தெரியவில்லை.
காரணம் 2 - இதனால் அடுத்தடுத்து ரயில்கள் வேகமாக வந்து மோதி உள்ளன. கடைசியாக சரக்கு ரயில் மோதும் வரை அங்கே இப்படி ஒரு விபத்து நடந்ததே யாருக்கும் தெரியாது.
காரணம் 3 - காட்டு இருள்: முதல் ரயில் விபத்துக்கு உள்ளான பின் அங்கே கடும் இருள் நிலவி உள்ளது. இதனால் அடுத்தடுத்து வந்த ரயில்களுக்கு அங்கே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இது விபத்து ஏற்பட முக்கிய காரணம்.
காரணம் 4 - அங்கே கோரமண்டல் ரயிலில் மோதிய யஷ்வந்த்பூர் ரயில் அதிவேக எக்ஸ்பிரஸ் என்பதால் வேகமாக வந்துள்ளது. இதனால் அதன் ஓட்டுனர் ஏற்கனவே தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகளை பார்த்து இருந்தாலும் கடைசி நேரத்தில் பிரேக் பிடித்து இருக்க முடியாது.
தெரியாத காரணம் - முதலில் தடம் புரண்ட கோரமண்டல் ரயில் ஏன் தடம் புரண்டது என்பது விசாரணைக்கு பின்பே தெரிய வரும். இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications