ஒரு "ஃபேக் போட்டோ".. பார்த்ததும் கோபத்தில் குகி பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்ற ஆண்கள்.. ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் குகி சமூகத்து பெண்கள் இருவர் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது ஏன்? இந்த சம்பவத்திற்கு காரணமான விஷயம் என்ன? இதை தூண்டியது யார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.

How did a fake photo trend lead to the naked parade of women in Manipur? What happened really?

அதன்பின் நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க.. பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவர்கள் பலரும் தொடர்பு உண்டு என்று வீடியோக்கள் மூலம் தெளிவாகி உள்ளது. கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இப்போதுதான் வெளியாகி உள்ளது.

மக்கள் இடையே இந்த வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து வீடியோ வெளியான காரணத்தால் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மணிப்பூர் மாநில போலீஸ்.

குகி சமூகத்தை சேர்ந்த பெண்கள் மெய்ட்டி சமூகத்தை சேர்ந்த ஆண்களால் இந்த கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி மலைவாழ் மக்கள் நிலப்பகுதியில் வசிக்கும் மெய்ட்டி மக்களுக்கும் இடையில்தான் மோதல் நடக்கிறது. அங்கே 53% மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ளனர். அதே சமயம் குகி உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள் 40% மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.

மெய்ட்டி சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்த்துக்கொள்ள பாஜக அரசு முடிவு எடுத்தது. இதையடுத்து ஏற்பட்ட மெய்ட்டி - குகி மோதல் கலவரமாக மாறி உள்ளது. மணிப்பூரில் மெய்ட்டி பிரிவினர்தான் மெஜாரிட்டி, இவர்களின் ஆதரவில் எளிதாக தேர்தல்களை வெல்ல முடியும் என்பதால் பாஜக இவர்களுக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க நினைக்கிறது. இதுவே அங்கே கலவரத்திற்கு காரணம்.

என்ன நடந்தது?: மணிப்பூரில் குகி சமூகத்து பெண்கள் இருவர் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது ஏன்? என்ற விவரமும் வெளியாகி உள்ளது. கலவரத்திற்கு இடையே இயல்பாக இந்த சம்பவம் நடக்கவில்லை.

பெரு பொய்யான போட்டோ காரணமாக கோபம் அடைந்த மெய்ட்டி பிரிவு ஆண்கள்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். அதன்படி மணிப்பூரில் பொய்யான போட்டோ ஒன்று பரவி உள்ளது. மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் பகுதியில் அந்த போட்டோ டிரெண்டாகி உள்ளது.

பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த மெய்ட்டி பிரிவு இளைஞர்கள் சிலர்.. அந்த பெண் குகி பிரிவு ஆண்களால் கொலை செய்யப்பட்டதாக டிரெண்டு செய்துள்ளனர். மெய்ட்டி பிரிவு பெண்ணை குகி ஆண்கள் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக அவர்கள் போஸ்ட் செய்துள்ளனர்.

இதையடுத்தே கோபம் அடைந்த மெய்ட்டி ஆண்கள் குக்கி பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் கொண்டு சென்றுள்ளனர். வாட்ஸ் ஆப்பில் வந்த செய்திக்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ஆனால் வாட்ஸ் ஆப்பில் பரவிய அந்த தகவல் பொய்யானது ஆகும்.

அது டெல்லியில் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் ஆகும். இதைத்தான் மெய்ட்டி பிரிவு இளைஞர்கள் பொய்யாக பரப்பி உள்ளனர். இதை பார்த்து கோபம் அடைந்தே மெய்ட்டி ஆண்கள் பழிவாங்கும் விதமாக குகி பெண்களை சாலையில் நிர்வாணமாக கூட்டி சென்றுள்ளனர். ஒரு ஃபேக் புகைப்படம்.. இரண்டு பெண்களின் பலாத்காரத்திற்கு காரணமாக அமைந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+