இது எப்படி இருக்கு? இந்திய வங்கிகளில் 'தாதா' தாவூத் இப்ராஹிமின் ரூ 5,900 கோடி பணம் பாய்ந்த கதை...
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய வங்கிகளில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ரூ5,900 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கருப்புப் பணத்தைக் கொண்டுவருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் மத்திய உளவுத்துறை, ரா அமைப்பு ஆகியவற்றுடன் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் 1600 வங்கி கிளைகள் மூலமாக ரூ.5,900 கோடி பணத்தை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான அதிர வைக்கும் தகவல்கள்:
- நாடு முழுவதும் 1600 வங்கி கிளைகளில் தாவூத் இப்ராஹிமின் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
- இவற்றில் 900 கிளைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுடையதாகும்.
- சட்டவிரோத சுரங்கங்கள், போதைப் பொருள், ஆயுதக் கடத்தல் மற்றும் லாட்டரி முறைகேடுகள் மூலம் இந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது.
- எந்த ஒரு ஏஜெண்ட்டும் தம்முடைய சொந்தப் பெயரில் அக்கவுண்ட்டை தொடங்கவும் இல்லை.. யாருக்கெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அவர்கள் பெயரில் இந்த பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.
- இப்படி தொடங்கப்படும் அக்கவுண்ட்டுகளில் இருந்து ரூ1 லட்சம் பணம் பரிமாற்றம் செய்தால் ஒரிஜனல் அக்கவுண்ட்தாரருக்கு ரூ5 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டுவிடும்.
- ஏஜெண்ட்டுகள் வசமே ஏ.டி.எம். கார்டுகள் ஒப்படைக்கப்பட்டு விடுமாம்.
- அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட ஏஜெண்டுகள்தான் இத்தகைய பண பரிமாற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
- இத்தகைய பண பரிமாற்றத்துக்கு நாடு முழுவதும் சுமார் 300 ஏஜெண்டுகள் இயங்கி வருகின்றனர்.. இவர்கள் ஏராளமான வங்கி அக்கவுண்ட்டுகளைத் தொடங்கியிருக்கின்றனர்.
- கடந்த 5 ஆண்டுகளில் இத்தகைய நிழல் உலக தாதாக்களின் ஏஜெண்டுகள் தொடங்கிய சுமார் 1000 வங்கி அக்கவுண்ட் நம்பர்கள் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.
- இப்படி கண்டுபிடிக்கப்பட்ட அக்கவுண்டுகள் பெரும்பாலும் தாவூத் வகையறாக்களுடன் தொடர்புடையதாம்...
- கிராமப்புற வங்கிக் கிளைகளில் அதிக அளவு கெடுபிடி இருக்காது என்பதால் அவைகள் தான் இந்த ஏஜெண்டுகளின் இலக்காம்.
- லாட்டரி முறைகேடுகள் மூலம்தான் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறதாம்.. போலி லாட்டரி டிக்கெட்டுகளை புழக்கத்தில்விட்டுதான் பணத்தை அள்ளுகின்றனராம்.
- மற்றொரு வகை. நீங்கள் ரூ 1000 டெபாசிட் செய்தால் உங்களுக்கு ரூ10 ஆயிரம் உறுதி என்று நம்பிக்கை அளிக்கப்படுகிறது. தொடக்கத்தில் சில முறை சொன்னதொகையைக் கொடுத்து பெரும் எண்ணிக்கையிலான தொகையை டெபாசிட் செய்ய வைத்து விழுங்கி விடுவது மற்றொரு வகையாம்
- மேற்கு வங்கம், கேரளா, குஜராத், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் இத்தகைய லாட்டரி மோசடி வெகுஜோராக நடக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications