இந்தியாவின் முதல் கொரோனா தொற்று நோயாளிக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டது?
இந்தியா தன் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளியை அறிவித்து ஒரு வருடமாகிறது. இந்த ஓராண்டு காலம் பலருக்கும் தனிமைப்படுத்தும் ஆண்டாகவும், சிலருக்கு சிறைப்படுத்தப்பட்ட ஆண்டாகவும் தோன்றியது.
கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த 20 வயது மாணவி தான், இந்த கடுமையான தனிமைப்படுத்தலை முதலில் எதிர்கொண்டார். தன் தொண்டையில் ஏதோ அரிப்பது போல இருப்பதாக சுகாதார அதிகாரிகளிடம் கூறினார்.
அவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் எல்லாம் வந்த போது அவர் மகிழ்ந்து போனதாகத் தான் தெரிந்தது. அம்மாணவிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என அவரின் தாயாரிடம் உறுதியளித்தார் கேரளாவின் சுகாதார அமைச்சர் கே கே ஷைலஜா.
தான் மருத்துவமனையில் இருந்த போது, அவரின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது தனிமைதான் என கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார், சீனாவின் வூஹானில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த மாணவி.
"அது அவருக்கு சிறைவாசம் போல இருந்தது. பின்னர், நாம் அதை தனிமைப்படுத்தல் எனக் கூறினோம்" என திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் மருத்துவர் ஜிஜித் கிருஷ்ணா பிபிசி இந்தியிடம் கூறினார்.
அம்மாணவி 2020 ஜனவரி 27 முதல் 2020 ஜனவரி 30 வரை திருச்சூர் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. 2020 ஜனவரி 31 முதல் 2020 பிப்ரவரி 20 வரை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- கொரோனா வைரஸ் புதிய வகை நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி உங்களுக்கு எப்போது கிடைக்கும்?
அம்மாணவியிடம் 2020 பிப்ரவரி 16-ம் தேதி கொரோனாவுக்கான கடைசி பரிசோதனை எடுக்கப்பட்டதால் 2020 பிப்ரவரி 21 முதல் 2020 மார்ச் 01-ம் தேதி வரை அவருடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். கொரோனா தொற்று நெகட்டிவ் என பரிசோதனை மேற்கொண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருக்கு அவசியமான ஒன்று.
அம்மாணவியும், அவரோடு மருத்துவம் பயிலும் இரு கல்லூரி மாணவர்களும் அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இன்று அவர்கள் அனைவரும் தங்களை ஊடகங்களிடமிருந்து தனிமைபடுத்திக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறார்கள். "அவள் ஊடகங்களோடு பேச விரும்பவில்லை" என அம்மாணவியின் தந்தை பிபிசி ஹந்தி சேவையிடம் கூறினார்.
மாணவி மற்றும் மருத்துவர்கள் கவலை கொண்டனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவி மட்டும் கவலையடையவில்லை. கொரோனா வைரஸ் பரவிய மாணவியை பொது அரசு மருத்துவமனையிலிருந்து தங்கள் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்திருக்கும் விஷயத்தைக் கேட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் கவலையடைந்தார்கள்.
"கொரோனா நோயாளிகள் தங்கள் மருத்துவமனையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கான இடத்தை (Capacity) எப்படித் தயார் செய்ய வேண்டுமெனப் படித்திருக்கிறோம். அதைக் குறித்துச் சிந்தித்தோம். இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி திருச்சூரைச் சேர்ந்தவர் என ஒரு நாள் மதியம் எங்களிடம் கூறப்பட்டது. அது ஒரு விதமான கவலையை உண்டாக்கியது. கொஞ்சம் அழுத்தத்தையும் உண்டாக்கியது." என்கிறார் மருத்துவர் கிருஷ்ணா.
ஆனால் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்த உடன், அதற்கான பணிகள் அதிவிரைவாகத் தொடங்கப்பட்டன. 25 படுக்கைகளைக் கொண்ட வளாகத்தில் இருந்த எல்லா நோயாளிகளும் வேறிடத்துக்கு மாற்றப்பட்டார்கள். ஒரே ஒரு கொரோனா நோயாளியை கவனிக்க இத்தனை மாற்றங்களும் நடந்தன.
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான விளக்கம்
- கொரோனா தடுப்பூசியால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா?
"முதல் கொரோனா நோயாளி என் பெயரில் சேர்க்கப்பட்டார். சுகாதார அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஏற்கனவே திருச்சூருக்கு வந்திருந்தது, அம்மாணவிக்கான சிகிச்சை இடத்தை (Capacity) தயார் செய்ய உதவியது. இவை எல்லாமே ஒரே நாளில் நடந்தது" என்கிறார் அந்த 44 வயது மருத்துவர்.
கேரள சுகாதாரச் அமைச்சர் நள்ளிரவு 2 மணி வரை கூட்டங்களை நடத்தியதும், கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை இடத்தை (Capacity) தயார் செய்ய உதவியது என்கிறார் மருத்துவர்.
"அந்த நேரத்தில் எங்களிடம் மெடிகல் போர்ட் இல்லை. அவை எல்லாமே பிறகு வந்தது தான். மருத்துவர்கள் எப்படி பிபிஇ கிட்களை அணிய வேண்டும் போன்ற விவரங்களை எல்லாம் மற்ற மருத்துவர்களுக்கு விளக்குவது தான் எங்களின் உடனடி சவாலாக இருந்தது. நாங்கள் முதல் கொரோனா நோயாளியைக் கண்ட போது, அவர் மிதமான அறிகுறிகளோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இன்று நாம் கூறும் மைல்ட்லி சிம்ப்டொமேட்டிக் அளவில் பாதிக்கப்பட்டிருந்தார்" என்கிறார் மருத்துவர் கிருஷ்ணா.
"அவருக்கு நிமோனியா இல்லை. ஒரு ஃப்ளூவுக்கு என்ன மருத்துவ சிகிச்சை வழங்குவோமோ அதையே இவருக்கும் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. எந்த ஒரு சூழலிலும் எதையும் கூடுதலாகச் செய்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தோம்" என்கிறார்.
"கொரோனா நோயாளியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதில் மருத்துவர்கள் மிகவும் தெளிவாக இருந்தார்கள். அம்மாணவியைப் பொறுத்த வரை, மிதமான அறிகுறிகளோடு இருக்கும் 70 சதவீத நோயாளிகளைப் போல, அவரது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன் வைரஸோடு போரிட்டது" என்கிறார் மருத்துவர்.
"சீனாவில் இருந்து வந்து, இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி என்பதால் அம்மாணவி கொஞ்சம் கவலையில் இருந்தார். ஆனால் ஒரு மருத்துவம் பயிலும் மாணவி என்பதால் அவரது மனநிலை நன்றாக இருந்தது. அவரால் எங்களின் சிகிச்சைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்," என்கிறார் மருத்துவர் கிருஷ்ணா.
சிகிச்சை விதிகள் மாற்றம்
முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொண்ட சவாலே, கொரோனா ஒரு புதிய வைரஸ் என்பது தான். "பொதுவாக மருத்துவ சிகிச்சைகள் என்பது ஆதாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும். ஆதாரங்களைச் சேகரிக்க நேரம் தேவை. வலுவான ஆதாரங்களைச் சேகரிக்க நமக்கு நிறைய எண்ணிக்கையில் நோயாளிகள் தேவைப்பட்டது. அது தான் பெரிய சவாலாக இருந்தது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்க மருந்துகள் இல்லை எனக் கூறவில்லை, ஆனால் ஆதாரங்கள் இல்லை" என்றார் மருத்துவர் கிருஷ்ணா.
"கொரோனா வைரஸின் முதல் நோயாளி என்பதால், சிகிச்சை விதிமுறைகளில் ஒரு பெரிய மாற்றம் வந்தது. அம்மாணவியின் மிதமான கொரோனா அறிகுறிகளுக்கு Azithromycin என்கிற மருந்து கொடுக்கப்பட்டது. மற்ற பல மருந்துகளும் இதற்குப் பிறகு தான் வந்தது. சில மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் பின்வாங்கப்பட்டன. நாங்கள் பிளாஸ்மா தெரபியில் ஆர்வம் கொண்டோம். சொல்லப் போனால் இன்று கூட ஒரு கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளித்தோம்" எனக் கூறுகிறார் மருத்துவர்.
கோழிக்கோட்டின் பேபி நினைவு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அனூப் குமார் தான் முதன் முதலில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரினார்.
"இந்த பிளாஸ்மா தெரபி அழர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அதனால் கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் பின் நாளில் தெரியவந்தது" என்கிறார் மருத்துவர் அனூப் குமார்.
"சைடோகின் ரிலீஸ் சிண்ட்ரோம் என்கிற நோய் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். தொடக்கத்தில் அதிக அளவில் மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை. பின்னர், கொரோனா தீவிரமாக இருக்கும் நோயாளிகளுக்கு அதிக அளவில் மருந்துகள் கொடுக்கப்பட்டது. கொரோனாவால் ஏற்பட்ட அழர்ச்சியைக் கட்டுப்படுத்துவது தான் இதன் நோக்கம்" என்றார் மருத்துவர் அனூப்.
இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளித்தது திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு எப்படி இருக்கிறது?
"அது எங்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது. கடந்த ஒரு வருட காலத்தில் ஆறு யூனிட் மருத்துவர்களில் ஒவ்வொரு யூனிட்டும் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தது. கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது," என்கிறார் மருத்துவர் கிருஷ்ணா.
பிற செய்திகள்:
- நிர்மலா சீதாராமன் இந்திய பட்ஜெட் தாக்கல் - எதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
- மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது
- விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளர்களை நசுக்குகிறதா அரசு? - குவியும் வழக்குகள்
- தூத்துக்குடியில் லாரி ஏற்றி காவல் உதவி ஆய்வாளர் கொலை - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!















Click it and Unblock the Notifications