2 கிராமங்களை இணைத்த மேஜர் சீதா.. வயநாட்டில் 31 மணி நேரத்தில் பாலம் கட்டிய இரும்பு பெண்.. ரியல் ஹீரோ
வயநாடு; வயநாட்டில் இடிந்த சூரல்மாலா மற்றும் முண்டக்கை இடையிலான பாலத்திற்கு பதிலாக இந்திய ராணுவம் அதிரடியாக 31 மணி நேரத்தில் புதிய பாலம் ஒன்றை கட்டி உள்ளது. இதற்கான குழுவை வழி நடத்திய இந்திய ராணுவ மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் நடைபெற்றது.
31 மணிநேரம் இடைவேளையின்றி உழைத்த பிறகு, இந்திய இராணுவம் நிலச்சரிவுகளால் சிதைக்கப்பட்ட வயநாட்டில் உள்ள இரண்டு குக்கிராமங்களான சூரல்மாலா மற்றும் முண்டக்கை கிராமங்களை ஒரு வழியாக மீண்டும் இணைத்து உள்ளது.

இங்கே இருந்த பெய்லி பாலம் உடைந்த நிலையில்.. இரண்டு கிராமங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தி 190 அடி தற்காலிக இரும்பு பாலத்தை கட்டி உள்ளனர். 100 அடி நீளமான கான்கிரீட் பாலம் மலைகளில் இருந்து பெயர்ந்து விழுந்த பாறைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு கிராமங்களுக்கு இடையே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வயநாட்டில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. அங்கே இதுவரை 310 பேர் பலியாகி உள்ளனர். இங்கே பாலம் இடிந்த காரணத்தால் இரண்டு ஊர்களை இணைப்பது கடினமாக இருந்தது. அதோடு மீட்பு பணிகளும் கடினம் ஆனது.
புதிய பாலம்; பாலம் உடைந்த அதே இடத்தில், ஆயத்தமான டிரஸ் பாலம் கட்டப்பட்டுள்ளது. இராணுவம் முதலில் ஒரு ஆம்புலன்ஸைக் கடந்து செல்ல அனுமதித்தது மற்றும் அதன் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை சோதிக்க பாலத்தின் மீது ஒரு இராணுவ டிரக்கை ஓட்டி சோதனை செய்தது. இதற்கான குழுவை வழி நடத்திய இந்திய ராணுவ மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் நடைபெற்றது.
அவரின் தலைமையில்தான் இந்த மொத்த பாலமும் கட்டப்பட்டது. பாலத்தை கட்டுவதன் தொடக்கம் முதல் இறுதி வரை திட்டங்களை வகுத்து , வீரர்களை ஒருங்கிணைத்து பணிகளை செய்தது இவர்தான்.
3 மீ அகலம் கொண்ட இந்த பாலம் 24 டன் எடையை தாங்கும் திறன் கொண்டது. இந்த பாலம் மூலம் முண்டக்கையில் தேடுதல் பணிகளை துரிதப்படுத்த முடியும் என்று கர்நாடகா மற்றும் கேரள துணைப் பகுதியின் பொது அதிகாரி (ஜிஓசி) மேஜர் ஜெனரல் வி டி மேத்யூ தெரிவித்தார்.
மண் அள்ளும் இயந்திரங்கள், குழிகளை தோண்டும் குழுக்கள் , டிரக்குகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜீப்கள் முண்டகைக்கு செல்ல இந்த ஒரு பாலமே இனி போதுமானது என்று இராணுவ மேஜர் சீதா தெரிவித்துள்ளார். இதுவரை, தேயிலை தோட்டத்தில் ஏற்கனவே இருந்த ஆஃப்-ரோட் ஜீப்புகள் மட்டுமே தேடுதல் தளங்களுக்கு பொருட்கள், ஆட்கள் மற்றும் கருவிகளை ஏற்றிச் சென்றன. முண்டகையில் உள்ள 400 வீடுகளில் 30 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. இன்னும் பலர் காணவில்லை.
இப்போது பாலம் கட்டப்பட்டதால் இங்கே மீட்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். கேரள மக்கள் தற்போது மேஜர் சீதா ஷெல்கேவை இரும்பு பெண்மணி என்றும்.. ரியல் ஹீரோ என்றும் கூறி கொண்டாடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications