"பொறி"யில் சிக்கிய "கள்ளக்காதல்".. பழைய குடோனில் கணவன்.. ட்ராலி பேக்கிற்குள் "பெண்".. போலீஸ் சபாஷ்
சண்டிகர்: கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்துவிட்டதால், கணவன் அந்த பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டார்.. இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஹரியானாவின் மானேசர் மாவட்டத்தில் குக்டோலா என்ற கிராமத்தில், ஒரு பண்ணை உள்ளது.. இந்த பண்ணையில் ஒரு பழைய குடோனும் உள்ளது.. இங்கு 30 வயதுடைய பெண்ணின் சடலம் கிடப்பதாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி போலீசாருக்கு தகவல் பறந்தது..

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அந்த சடலம் எரிந்த நிலையில் கிடந்தது.. அதற்கு தலையும் கைகளும் காணோம்.. இதையடுத்து, போலீசார் அனுப்பி வைத்து, வழக்கு பதிவுசெய்து, விசாரணையையும் துவங்கினர்..
குடோன் ஓனர்: இந்த குடோனின் ஓனர்தான் போலீசுக்கு சடலம் இருப்பதாக தகவல் தந்திருக்கறார்.. 8 ஏக்கர் விவசாய நிலத்தை ஒத்திக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாராம் இந்த குடோன் ஓனர்.. சம்பவத்தன்று, குடோனில் இருந்து புகை வருவதாகவும், உடல் எரிக்கப்படுகின்ற நாற்றம் வருவதாகவும், பக்கத்து வீட்டு நண்பர் தெரிவித்ததால், உடனே ஓடிச்சென்று பார்த்ததாகவும், அப்போதுதான் எரிந்து போன சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், பிறகு போலீசிடம் தகவல் தெரிவித்ததாகவும் விசாரணையில் கூறினார்.
பிறகு சம்பந்தப்பட்ட பெண் யார் என்ற விசாரணையை போலீசார் துவங்கினர்.. அடுத்த 2வது நாள், அந்த பெண்ணின் வெட்டப்பட்ட கைகளையும், தலையையும் போலீசார் கண்டுபிடித்தனர்...இவைகளை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் கேர்கி டௌலா பகுதியை சேர்ந்தவர் என்பது உறுதியானது. அவரது கணவர் பெயர் ஜிதேந்தர்.. 34 வயதாகிறது. காந்தி நகர் பகுதியை சேர்ந்தவராம்... மனைவியை பொன்று, சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, இந்த குடோனில் கொண்டு வந்து எரித்துள்ளார்.
கொலையாளி : இதைவைத்து போலீசார் அவரை கைது செய்தனர். மொத்த உடல் உறுப்புகளையும், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. கொலையாளி ஜிதேந்திராவையும் கைது செய்து, எதற்காக மனைவியை கொன்றார் என்ற விசாரணயை துவங்கினர். அப்போது, அவர் தந்த வாக்குமூலம் குறித்தும், அவரை எப்படி தாங்கள் பொறி வைத்து பிடித்தோம் என்பது குறித்தும் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
"கொலையாளி ஜிதேந்தர், கடற்படை சமையல்காரராக பணிபுரிந்து 2022ல் ஓய்வு பெற்றவர் ஆவார்.. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் தம்பதி மகிழ்ச்சியுடன்தான் இருந்திருக்கிறார்கள்.. திடீரென ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன், ஜிதேந்திராவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம் சோனியாவுக்கு தெரிந்துவிட்டது.. அதுமட்டுமல்ல, அந்த பெண்ணை, ரகசியமாக ஜிதேந்தர் திருமணம் செய்து கொண்டுவிட்டாராம்.
இதெல்லாம் தெரிந்து, மனைவி கொந்தளித்துள்ளார்.. இந்த கள்ளக்காதலை முறித்து கொள்ளும்படி எந்நேரமும் சொல்லி கொண்டே இருந்துள்ளார்.. இதில்தான் தம்பதிக்குள் தகராறும் வெடித்தது.. சோனியா உயிருடன் இருக்கும்வரை, கள்ளக்காதலியுடன் நிம்மதியாக இருக்க முடியாது என்று தெரிந்ததால் கொலை செய்ய ஜிதேந்திரா முடிவு செய்தார். கொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, சோனியாவை கொல்ல முடிவு செய்துள்ளார்..
க்ளூ கிடைத்தது: இவரை பிடிக்க நாங்கள் பெரும் முயற்சி எடுத்து கொண்டோம்.. ஜிதேந்திரா பற்றிய கூடுதல் விவரங்களை சேகரிக்கவும் தொடங்கினோம்.. இதற்காக 50 முதல் 60 சிசிடிவி வீடியோக்களை சரிபார்த்தோம். அப்போதுதான் அந்த வீடியோ சிக்கியது.. ஜிதேந்தர் ஒரு பெரிய கேரிபேக்கை எடுத்து சென்று கொண்டிருந்தார்.. அந்த பிளாக்ஸ்டிக் கவர், பெரிதாக பேக் செய்யப்பட்டிருந்தது.. அதை தன்னுடைய முதுகில் மாட்டிக்கொண்டு, சென்றது பதிவாகி இருந்தது..
ஆனால், மறுபடியும் திரும்பி வரும்போது, அந்த பை காலியாக இருந்தது.. அதாவது, முழுமையாக நிரம்பிய ட்ராலி பேக் மற்றும் பையுடன் பைக்கில் சென்றுள்ளார்.. அதற்கேற்றவாறு, வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்திருக்கிறார்.. இதை வைத்துதான் ஜிதேந்தராவை பிடித்தோம்.. ஏப்ரல் 26ம் தேதி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. ஆனால், ஜிதேந்தர் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து கொள்கிறார்.. கொலை செய்ததற்கான பதற்றமோ, பயமோ அவரிடம் காணப்படவில்லை.. எந்த வருத்தமும் அவர் காட்டவில்லை,
பண்ணை வீடு: பண்ணையில் உள்ள குடோனுக்கு சடலத்தை எடுத்து சென்றுள்ளார்.. இரண்டு டியோடரன்ட் பாட்டில்களை பயன்படுத்தி சடலத்தை எரித்துள்ளார்.. நாய்கள் அந்த சடலத்தில் உள்ள கால்களை சுமந்து செல்வதை அந்த பகுதியில் உள்ளவர்கள் கண்டிருக்கிறார்கள்.. அப்படித்தான், சோனியாவின் கைகால்கள் மீட்கப்பட்டன. சோனியாவின் தலையை வெட்டி, ஒரு குளத்தில் வீசியதாக ஜிதேந்தர் எங்களிடம் சொன்னார்.. அதையும் மீட்டு விட்டோம். அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து வருகிறோம்..












Click it and Unblock the Notifications