பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவு.. இந்தியா கண்டுபிடித்த புதிய கோள்.. எப்படி சாத்தியமானது!
இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று இந்திய விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர்.
Recommended Video

அஹமதாபாத்: இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று இந்திய விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் கோள்களை கண்டுபிடித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனால் இந்த அசாத்திய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது இஸ்ரோ கிடையாது, தனியார் நிறுவனம் ஒன்று.
அஹமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் இயங்கும், பிஆர்எல் என்ற குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

பெயர் என்ன
இந்த புதிய கிரகம் EPIC 211945201 என்று சூரிய குடும்பத்தில் உள்ளது. இந்த சூரிய குடும்பத்தில் இந்த கிரகம் மட்டுமே உள்ளது. இந்த கிரகத்திற்கு EPIC 211945201b என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

வேகம்
பார்க்க பூமி போல இருந்தாலும் பூமியை விட 10 மடங்கு எடை அதிகமாக உள்ளது. இதை சுற்றி 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் இங்கு உயிரினம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் பூமியை விட 27 சதவிகிதம் பெரிதாக இருக்கும். இது அதன் சூரியனை சுற்ற வெறும் 19.5 நாட்கள்தான் ஆகும். அதாவது பூமியில் 19.5 நாளில், அந்த கோள் அதன் சூரியனை சுற்றிவிடும்.

ஒளி
இந்த கோளை கண்டுபிடிக்க நாசா மறைமுகமாக உதவி இருக்கிறது. நாசா தற்போது கெப்ளர் என்ற செயற்கைக்கோளை, புதிய கோள்களை கண்டுபிடிக்க விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இந்த செயற்கைகோள் கண்டுபிடிக்காத, கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் முதலில் EPIC 211945201 சூரியனை கண்டுபிடித்துள்ளது. அதில் ஏற்படும் ஒளி மாற்றங்களை வைத்து அதற்கு கோள் இருப்பதை நம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சோதனை
இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக ராஜஸ்தானில் பெரிய தொலைநோக்கி ஒன்றுள்ளது. 1.2எம் திறன் கொண்ட இந்த தொலைநோக்கி ராஜஸ்தானில் அபு என்ற இடத்தில் உள்ளது. இதை வைத்து கடந்த ஒரு மாதமாக அந்த கோளை ஆராய்ந்து, அது நட்சத்திரம் இல்லை, பூமியை போலவே இருக்கும் கோள்தான் என்று கண்டுபிடித்துள்ளனர்.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications