வக்கீலைப் பிடிக்க அதிமுக பட்ட பாடு.. ஜெயலலிதாவுக்கு வந்த பரிதாப நிலையைப் பாருங்கள்!
டெல்லி: ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அவர் சார்பில் ஆஜராக நல்ல வக்கீல் கிடைக்காமல் தவித்துத் தடுமாறிப் போயுள்ளது அதிமுக.
3 முறை முதல்வராக இருந்தவருக்கு, நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியின் தலைவருக்கு, தமிழகத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியமைத்தவருக்கு, லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அத்தனை கட்சிகளுக்கும் தண்ணீர் காட்டிய தலைவருக்கு நேர்ந்த நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் முக்கிய வக்கீல்கள் யாரும் கிடைக்காத நிலையில் தடுமாறியுள்ளது அதிமுக. ஆனால் இந்த நிலைக்கு அதிமுக வக்கீல்கள் பிரிவின் மோசமான அணுகுமுறையே காரணம் என்று குமுறுகிறார்கள் அதிமுகவினர்.
தெளிவே இல்லாதவர்களை அதிமுக வக்கீல்களாக ஜெயலலிதா வைத்திருந்ததே இதற்குக் காரணம் என்பது அவர்களின் வருத்தமாக உள்ளது.

ராம்ஜேத்மலானி முதல் குழப்பம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரிய வழக்கில் ராம்ஜேத்மலானியை வாதாட விட்டது முதல் குழப்பம். அதன் பின்னர் தலைமை நீதிபதி, பதிவாளர் என அனைவரையும் டென்ஷன்படுத்தியது இன்னொரு குழப்பம்.

வர மறுத்த சால்வே
அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் மனு மீது ஆஜராக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை அணுகினர். ஆனால் அவரோ அக்டோபர் 21ம் தேதி வரை தன்னால் வர இயலாது என்று கூறி விட்டார். இதனால் அதிமுக தரப்பு குழம்பிப் போனது.

ஜூனியரை விட்டு
இதனால் கடைசி நேரத்தில் கவ்ரவ் அகர்வால் என்ற ஜூனியரை விட்டு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

ராஜஸ்தானிலிருந்து.. !
தமிழகத்தின் அசைக்க முடியாத தலைவரான ஜெயலலிதாவுக்கு ஆஜராக தமிழகத்திலிருந்து யாரும் கிடைக்காமல் கடைசியில் ராஜஸ்தானிலிருந்து இந்த அகர்வாலைப் பிடித்துள்ளனர்.

பாலி நார்மன்
கடைசியில் தற்போது ஜெயலலிதாவுக்காக ஆஜராக கர்நாடகத்தைச் சேர்ந்த பாலி நார்மனைப் பிடித்துள்ளனர். இவர் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக தீவிரமாக வாதாடியவர் ஆவார்.

தமிழகத்தை கடுமையாக சாடிய வக்கீல்
காவிரி வழக்கின்போது உச்சநீதின்றத்தில் இவர் தமிழகத்திற்கு எதிராக மிகக் கடுமையாக வாதிட்டவர். ஜெயலலிதாவையும் கடுமையாக சாடியவரும் கூட. இவர்தான் இப்போது ஜெயலலிதாவுக்காக ஜாமீன் கோரப் போகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications