For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில்.. ஜாதி இல்லாவிட்டால் பாஜக இல்லை.. லிங்காயத்து, உயர் ஜாதி வாக்குகளை அப்படியே லபக்கியது!

பாஜகவின் வாக்கு வங்கி லிங்காயத்துகளே என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார்- வீடியோ

    பெங்களூரு: இந்து மதத்தில் இருந்து லிங்காயத்துகளை பிரித்து தனி மதமாக அங்கீரித்த போதும் அச்சமூகத்தினரின் 62% வாக்குகள் பாஜகவுக்கே கிடைத்துள்ளது. காங்கிரஸுக்கு இது பின்னடைவுதான்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜாதிய ஓட்டுகள் எப்படி கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறது என்கிற விவரத்தை சிஎஸ்டிஎஸ் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

    How Karnataka voted: Here is the caste wise break-up

    அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:

    • கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 38%, பாஜக 36.2%; ஜேடிஎஸ் 18.3% வாக்குகளைப் பெற்றது.
    • தேர்தல் முடிவுகளானது அரசுக்கு எதிரான அலை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
    • 2013-ம் ஆண்டு காங். பெற்ற வாக்குகளில் எந்த மாற்றமும் இல்லை.
    • 2013ம் ஆண்டில் பாஜகவும் கேஜேபி மற்றும் பிஎஸ்ஆர் காங்கிரஸ் இணைந்து 32.3% வாக்குகளைப் பெற்றிருந்தது.
    • கடலோர கர்நாடகாவில்மொத்தம் 21-ல் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியைக் குவித்திருக்கிறது.
    • கடலோர கர்நாடகாவில் பாஜக 50% வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
    • தென் கர்நாடகாவில் 51 தொகுதிகளில் 9-ல் தான் வென்றது.
    • தென் கர்நாடகாவில் ஜேடிஎஸ் 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
    • ஐதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் கூடுதலாக 7,6% வாக்குகளைப் பெற்றுள்ளது.
    • ஐதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் 42.2% வாக்குகள் பெற்றுள்ளது.
    • லிங்காயத் சமூகத்தினரின் 62% வாக்குகளை பாஜக அறுவடை செய்துள்ளது.
    • உயர் ஜாதியினரின் 52% வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
    • இதர பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் 40% காங்கிரஸ் வசப்படுத்தியுள்ளது.
    • பாஜகவும் 37% இதர பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை கைப்பற்றியிருக்கிறது.
    • தலித்துகளின் வாக்குகளில் 48% காங்கிரஸுக்கும் 28% பாஜகவுக்கும் கிடைத்துள்ளது.

    English summary
    In the recently concluded Karnataka assembly elections it became clear that a bulk of the Lingayat votes went to the BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X