நோட் பண்ணுங்க.. உதவும்! ஒரே ஒரு லேசர் போதும்! இதயத்தில் எவ்வளவு பெரிய அடைப்பாக இருந்தாலும் மாயமாகும்
நாக்பூர்: நமது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை லேசர் மூலம் அகற்றும் சிகிச்சை முறை நாக்பூரில் நடந்த மருத்துவ கான்க்ளேவ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நவீனக் காலத்தில் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது. ஐடி தொடங்கிப் பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

இது நமது உடலில் பல வித சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதய நாளங்களில் அடைப்புகளைக் கூட ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் இதய நாளங்களில் அடைப்பு என்பது ரொம்பவே அரிய விஷயமாக இருந்த நிலையில், இப்போது அது பரவலாக ஏற்படுகிறது.
லேசர் சிகிச்சை: இந்த அடைப்பு ஏற்பட்டால் அதற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஆனால், இந்த ஆஞ்சியோபிளாஸ்டிக் ஆப்ரேஷன் செய்தால் நாம் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி இருக்கும். உள்ளே பொருத்தப்படும் ஸ்டென்ட் காரணமாக நோயாளிகளுக்கும் அசவுகரியம் ஏற்படும். இதனால் ஆஞ்சியோபிளாஸ்டிக் முறைக்கு மாற்றாக லேசர் சிகிச்சை முறையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே தென்னிந்தியா உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த முறையில் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதற்கிடையே வட இந்தியாவிலும் கடந்தாண்டு ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அகற்ற இதே லேசர் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை ஆப்ரேஷனுக்கு நல்ல பலன் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகையில், "லேசர் சிகிச்சை முறையில் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளில் லேசர் செலுத்தப்படும். அந்த லேசார் ஒளி இந்த அடைப்புகளை ஆவியாக்கும். நமது இதயத்தில் உள்ள ரத்த குழாய்களைக் காயப்படுத்தாமல் தமனியில் ஏற்பட்டுள்ள அடைப்பு அகற்றப்படும்.
ஸ்டென்ட் கருவி: ரத்தக் குழாய்களை லேசர் மிகவும் திறம்படச் சுத்தப்படுத்துகிறது, இந்த முறையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஸ்டென்ட் கூட தேவைப்படாது.. லேசர் சிகிச்சை என்பது ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தின் சீரான ஓட்டத்தை அனுமதிக்க ரத்த நாளங்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையாகும். லேசர் ஒளி மூலம் அந்த ரத்த பிளாக்குகள் ஆவியாக்கப்படும். இந்த முறையில் இதுவரை 55 பேருக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்துள்ளோம்.
ஆபத்து குறைவு: லேசர் மூலம் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்களால் மிக எளிதாக பலூன்கள் மற்றும் ஸ்டென்ட்களை உள்ளே அனுப்ப முடிகிறது. மேலும், ஸ்டென்ட்டின் ஒரே இடத்தில் இருப்பதையும் இது உறுதி செய்கிறது" என்றார். அதாவது ஆஞ்சியோபிளாஸ்டிக்குப் பிறகு சில நேரங்களில், ஸ்டென்ட் நிலை மாறுகிறது. இது உயிருக்கே கூட ஆபத்தானதாக மாறலாம். இதுபோன்ற ஆபத்துகளை இந்த லேசர் சிகிச்சை குறைக்கிறதாம். மேலும், குறுகிய ஸ்டென்ட்களைப் பயன்படுத்தப்படுவதால் ஆபத்தும் குறைவு.
அசவுகரியத்தைக் குறைக்கும்: இது நோயாளிகளுக்கும் கூட அசவுகரியத்தைக் குறைக்கிறது. அவர்கள் மிக வேகமாகக் குணமடைய இது காரணமாக இருக்கிறது. இந்த சிகிச்சை முறையில் குறைவான நாட்களே மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும் என்பதால் நோயாளிகளுக்குப் பல வழிகளில் இது நன்மை பயக்கும். இந்த முறையில் சிகிச்சை பெற்ற பெரும்பாலான நோயாளிகள் குறுகிய காலத்திற்குள் தங்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்புகிறார்களாம்.












Click it and Unblock the Notifications