நான் இந்தியாவின் அனைத்து மகள்களுக்காகவும் தான் போராடுகிறேன்: நிர்பயாவின் தாய்
டெல்லி: இந்தியாவின் அனைத்து மகள்களுக்காகவும் தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை பலாத்காரங்களும், கொலைகளும் நடந்தால் அரசு சட்டத்தை திருத்தும் என நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் 23 வயது பிஸியோதெரபி மாணவியான நிர்பயா பலியானார். இந்த வழக்கில் கைதான மைனர் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நொந்து போய்விட்டோம்
ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு அதிருப்தி தான் ஏற்பட்டுள்ளது. மனம் உடைந்து போயுள்ளோம். ஆனால் நம்பிக்கையை இழக்கவில்லை.

மைனர் குற்றவாளி
மைனர் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவரை விடுவித்துவிட்டனர். இருப்பினும் மீதமுள்ள 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

சட்டம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்தது தான். இன்னும் எத்தனை பலாத்காரங்களும், கொலைகளும் நடந்தால் அரசு சட்டத்தை திருத்தும்?

மகள்கள்
இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம் இல்லை. நான் இந்தியாவின் அனைத்து மகள்களுக்காகவும் தான் போராடிக் கொண்டிருக்கிறேன். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்.

ஜோதி சிங்
என் மகளின் பெயர் ஜோதி சிங். அவரின் பெயரை தெரிவிக்க நான் வெட்கப்படவில்லை. தவறு செய்தவர்கள் தான் வெட்கி அவர்களின் பெயரை மறைக்க வேண்டும். இன்று முதல் அனைவரும் என் மகளை ஜோதி சிங் என்றே கூறுங்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications