For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் பண ஒழிப்பு.. மக்களின் சேமிப்பு உணர்வின் மீது விழுந்த மரண அடி!

By Shankar
Google Oneindia Tamil News

-எஸ் ஷங்கர்

நிறையப் பேர் மோடி கொண்டு வந்ததாலேயே பண ஒழிப்பை எதிர்ப்பதாக நினைத்து இன்னும் மூர்க்கமாக மோடிக்கு கொம்பு சீவுகிறார்கள்.

விதவிதமான 'ஆப்'புகளை இன்னும் கூராக சீவி சாமானியன் பின்னால் சொருகப் பார்க்கிறார்கள்.

நடப்பது என்னவென்று பாருங்கள்... டாக்டர் மன்மோகன் சிங் சொன்னது அத்தனையும் மெய்யாகப் போகிறது. இன்றைய ராஜ்யசபா விவாதத்தின் போது பண ஒழிப்பில் அடுத்து நடக்கப் போவதை மிக தீர்க்கமாகக் கணித்துக் கூறினார் சிங், பணவியல் பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி டாக்டர் சிங் இப்படிச் சொன்னார்: "இதுபோன்ற முன்னேற்பாடில்லாத திட்டங்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில்... நம்மைச் சாகடித்துவிடும்." (This measures (Demonitisation) are will cause distress in the short run, but in the interest of the country in the long run, I reminded of John M Keynes said one, all of us will dead.)

பண ஒழிப்பு சரியா தவறா என்பதல்ல இப்போது பிரச்சினை. சிங் குறிப்பிடுவதும் அதையல்ல. நல்ல திட்டமாகவே இருக்கட்டும். அதற்காக இப்படியா அலங்கோலமாக அமலுக்குக் கொண்டுவருவது?

How Modi's demonetisation will be kills people savings habit?

காய்ச்சலுக்குப் போடும் ஊசியை கண்ணில் சொருகினால் எப்படி இருக்கும்? அமல்படுத்தும் விதம், Execution மிக முக்கியம். மோடியைப் போலவே அவசரப்பட்டு இதே பண ஒழிப்பைக் கையிலெடுத்தவை இதுவரை 16 நாடுகள், ரஷ்யா, பர்மா உள்பட. இந்த பதினாறு நாடுகளுமே அதன்பிறகு தலை நிமிரவே இல்லை. பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.

இந்தியாவில் இப்போது பண ஒழிப்பு காரணமாக வங்கி க்யூவில், அதிர்ச்சியில் மற்றும் மருத்துவமனைகளில் காசின்றி செத்தவர்கள் எண்ணிக்கை 76 பேர். இனிமேல்தான் மோசமான இறப்புகள் காத்திருக்கின்றன. கடந்த ஒரே வாரத்தில் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் காலி. ஜவுளி, கட்டுமானம், லெதர், நகைத் தொழில், நெசவு போன்ற அமைப்பு சாரா துறைகளில் பணப் புழக்கம் அடியோடு இல்லாததால் வேலை இழப்பு தொடர்கிறது. இன்னும் பல லட்சம் வேலை இழப்புகள் காத்திருக்கிறது. இவர்கள் என்ன செய்வார்கள்?

டாக்டர் சிங் கேட்பதைத்தான் அத்தனைப் பேரும் கேட்கிறார்கள். 'என் பணத்தை ஏன் எடுக்க விடாமல் தடுக்கிறாய்? நாங்கள் என்ன லோன் கேட்டா வரிசையில் நிற்கிறோம்? 500, 1000 ஐ தாராளமாக நிறுத்திக் கொள். அதற்கு இணையான பணத் தாள்களை எந்த சிக்கலுமின்றி, நெருக்கடியும் இன்று வழக்கம் போல வழங்குவதுதானே?'

அப்படி வழங்க வழியில்லாமலா இருக்கிறது? இந்திய பணத்தாள் அச்சடிப்பு மையங்கள் அத்தனை மோசமா? இல்லை.. மோடியின் இலக்கு, சாமானிய, நடுத்தர மக்களின் சேமிப்புகள். அத்தனை சேமிப்புகளையும் வங்கிகளில் டெபாசிட்டுகளாகக் குவித்தாயிற்று. ஆனால் அதைத் திரும்பத் தரக்கூடாது என்பதற்காக இத்தனைக் கட்டுப்பாடுகள். போலீஸ் தடியடிகள்.

இப்போது குவிந்துள்ள 7 லட்சம் கோடிகளையும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் மீண்டும் பெருந்தொழில்களுக்கு முதலீடுகள் என்ற பெயரில் கடன்களாக தரப் போகிறோம் என்று நிதியமைச்சர் நேற்று கூறிவிட்டார். யாருக்கு கடன் தரப் போகிறார்கள்.. உங்களுக்கும் எனக்கும் அல்ல. இப்போது யாருக்கெல்லாம் ரூ 1.13 லட்சம் கோடி + 7200 கோடிகளை வராக் கடன்களாக தள்ளுபடி செய்தார்களோ, அதே பெரும் தொழிலதிபர்களுக்கு. காரணம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புத் தொழில்கள் அவர்கள் வசம்தான்.

பண ஒழிப்பு என்ற பெயரில் செயற்கை அவசர நிலையை உருவாக்கி, மக்கள் பணம் மொத்தத்தையும் உறிஞ்சியிருக்கிறது மோடி அன்ட் கோ என்பதை இன்று சாமானியனும் உணர ஆரம்பித்துவிட்டான். 'உன் பணத்தை வங்கியில் போடு... ஆனா திருப்பிக் கொடுக்க மாட்டேன்' - இது என்ன மாதிரியான மக்கள் நலத் திட்டம்?

நமது அடிப்படைக் குணம் சேமிப்பு. காலங்காலமாக நமது முன்னோர்களும், ஆட்சியாளர்களும் ஊட்டி வளர்த்த உணர்வு அது. தபால் நிலையங்களில் அட்டைகளில் தபால் தலை ஒட்டி பணம் சேர்த்துப் பழக்கப்பட்டவர்கள். வீடுகளில் அரிசிப் பானை, அஞ்சறைப் பெட்டி, கள்ளிப் பெட்டிக்கு அடியில் உள்ள ரகசிய சிறு அறைகளில் சேமித்துப் பழகியவர்கள். இதெல்லாம் கறுப்புப் பணம் அல்ல. அத்தனையும் கஷ்டப்பட்டு உழைத்த பணம்.

இப்போது அந்த சேமிப்பு உணர்வின் மீது சம்மட்டி அடி அடித்துவிட்டார்கள். இனி சேமிப்பு சாத்தியமில்லை. அனைத்தையும் வங்கியில் வை. வங்கி என்ற புரோக்கர் அவர்கள் இஷ்டப்படி முதலீடுகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். திரும்பத் திரும்ப பணமெடுக்க வந்தால் முகத்தில் மை பூசுவோம் என்ற அவமதிப்பு வேறு.

முன்பெல்லாம் வங்கிகள் மக்களிடம், குறிப்பாக நடுத்தர வர்க்கத்திடம் டெபாசிட் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தன. இனி 'நோ நீட் ஃபார் டெபாசிட்'. இலவசமாகவே மக்கள் பணம் பல லட்சம் கோடியாகக் குவிந்து கிடக்கிறதே. அதில் விளையாடிக் கொள்ளலாம்...

ஆஹா... மோடியின் திட்டம் நமக்கு 50 நாட்கள் கழித்து சொர்க்க வாசலைத் திறக்கப் போகிறது என நம்பிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், அந்த நரகத்தை அனுபவிக்க இப்போதே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானா!

English summary
How Modi's demonitisation severely attack our savings habit and house hold economics? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X