மம்தாவிற்கு சிம்ம சொப்பனமான 27 வயது பெண்! ரிம்ஜிம் சின்ஹாவின் ஒரு போஸ்ட்! கொல்கத்தாவே குலுங்குதே
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலையை தொடர்ந்து அங்கே பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தன்னெழுச்சியாக வந்து அங்கே போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் நடந்த இந்த பிரம்மாண்ட போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது ரிம்ஜிம் சின்ஹா என்பவரின் போஸ்ட்தான்.
கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது. நேற்று பெங்களூர், டெல்லி, மும்பை, புனே தொடங்கி நாடு முழுக்க சுதந்திர தின இரவுக்கு முன் பெண்கள் , ஆண்கள் இதை எதிர்த்து கூட்டம் கூட்டமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தா மக்கள் இடையே அதீத கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் அங்கே மம்தா அரசுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது.

கொல்கத்தாவில் நடந்த இந்த பிரம்மாண்ட போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது ரிம்ஜிம் சின்ஹா இளம்பெண்தான். எப்படி நேனோ ஆலைக்கு எதிராக மமதா பானர்ஜி போராட்டம் செய்தது அங்கே அரசியல் மாற்றமாக அமைந்ததோ.. அதே போன்ற அரசியல் மாற்றத்தை ரிம்ஜிம் சின்ஹா என்ற 27 வயது இந்த பெண்ணின் போராட்டம் அங்கே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டம் உச்சம்: கிட்டத்தட்ட மம்தா ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பெண்கள் அங்கே அவரின் ஆட்சிக்கே எதிராக கொதிக்க இவரின் பேஸ்புக் போஸ்ட் காரணம் ஆகும்.
கொல்கத்தாவின் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூகவியல் ஆராய்ச்சியாளர் ஆவார் ரிம்ஜிம் சின்ஹா. இவர்தான் சுதந்திர தின போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 14ம் தேதி இரவு மக்கள் கொல்கத்தா முழுக்க போராட்டம் நடத்த வேண்டும் என்று இவர்தான் அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்ட் 14-15 இடைப்பட்ட இரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், பெண்களுக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் இல்லை என்பது கிடைக்கவில்லை. இதற்காக போராட்டம் செய்வதே நம்முடைய நோக்கமாகும் என்று அவர் தனது கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், அது வைரலாக பரவியது. இதனை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்துள்ள நிலையில், ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்தனர். இதுவே அங்கு அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்து உள்ளது.
கைது: இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள். இவர் கைதான நிலையில்.. குழு வன்முறையில் ஈடுபட்ட மற்றவர்கள் யார் யார்.. அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விக்குத்தான் இன்னமும் பதில் கிடைக்கவில்லை!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications