சரண்டராக இருந்த சசிகலா புஷ்பாவை 'சண்டமாருதமாக' கொம்பு சீவிட்ட எதிர்வீட்டு 'இளவரசி'?
சென்னை/டெல்லி: அடுத்தடுத்த புகார்கள்... தப்பிக்க முன் ஜாமீன் மனு ... என ஓடி ஓடி களைத்துப் போனவராக இனிவழியே இல்லை சரணாகதிதான் முடிவு என இருந்தவர் சசிகலா புஷ்பா... ஆனால் திடீரென செய்தியாளர்களை அழைத்து தமிழக அரசியலை திருப்பிப் போடுவேன் என சண்டமாருதமாக சீறியதன் பின்னணியில் பலம் வாய்ந்த நபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் ஏறுமுகம் கண்டவர் சசிகலா புஷ்பா. ஆனால் அதிமுகவில் அண்மைக்காலத்தில் யாருமே செய்யத் துணியாத செயலாக ஜெயலலிதாவை பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
இது நாடு முழுவதும் ஆச்சரிய அலைகளைத்தான் ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு சசிகலா புஷ்பாவுக்கு தைரியம் வந்தது எப்படி? அவர் பின்னால் இருக்கும் சக்திகள் அவர்களா? இவர்களா? என ஏகத்துக்குமான விவாதங்கள் நடந்தேறின.

அந்தரங்கம் அம்பலம்
இருந்தபோதும் சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன... உச்சகட்டமாக அவரது வீட்டுக்குள் நடந்த அந்தரங்கங்களை வேலை செய்த பணிப்பெண்களே அம்பலப்படுத்த நொந்து போனாராம் சசிகலா புஷ்பா.

சரண்டர் மூடில்..
அதே காலகட்டத்தில் அவரை சுற்றியிருந்த பலரும் ஒதுங்கிக் கொள்ள அவர் தனிமரமாகிப் போனார்... இதனால் வேறுவழியின்றி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு 'அம்மாவே சரணம்' என பாடிவிட்டு எஸ்கேப்பாகிவிடுவது என்ற மூடுக்கு வந்திருந்தார் சசிகலா புஷ்பா.

தூதர் சிக்கலை...
தம்மை சந்தித்த பத்திரிகையாளர்கள் பலரிடமும் இதைத்தான் சொல்லி புலம்பியும் இருந்தார் சசிகலா. ஆனால் எவருமே சசிகலாவுக்காக போயஸ் தோட்டத்து பக்கம் போகவே முன்வரவில்லை என்றும் கூறிவந்தார். இதுதான் நேற்று முன்தினம் வரையிலான நிலவரம்....

கோபம், சீற்றம்...
ஆனால் நேற்று திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார் சசிகலா... முதல் நாள் சோகம் எதுவும் இல்லாமல் கோபம் கொப்பளிக்க அனலாகக் கொந்தளித்தார்... தமிழக அரசியலையே திருப்பிப் போட்டுவிடுவேன் என்றெல்லாம் ஜெயலலிதாவை பகிரங்கமாகவே மிரட்டினார்... அங்கிருந்த செய்தியாளர்களுக்கே இது மகா ஆச்சரியம்...

இளவரசியார் தலையீடு
அடடே! அதற்குள் எப்படி இந்த மாற்றம்? என்ற விசாரணையில்தான் எதிர்வீட்டு "இளவரசி" விவரங்கள் கிடைத்தன... இப்படி சரண்டராகப் போகிற மூடில் சசிகலா புஷ்பா இருக்கிறார் என்ற தகவல் இளவரசி தரப்புக்கு சீனியர் ஜேர்னலிஸ்ட் மூலமாக பாஸ் செய்யப்பட்டிருக்கிறது... ஆஹா என உஷாரான இளவரசியார் சசிகலா புஷ்பாவுக்கு தெம்பூட்டும் காரியங்களை செய்திருக்கிறார்...

யூ ஆர் போல்ட் லேடி
முதல் கட்டமாக சசிகலா புஷ்பா சார்ந்த சமூகத் தலைவர்களை பேச வைத்துவிட்டு பின்னர் இளவரசியாரும் பேசி, அப்படியெல்லாம் சோர்ந்துவிடக் கூடாது; இப்போ நீங்கதான் ஜெயலலிதாவை விட போல்ட் லேடின்னு உலகமே சொல்லுது; நீதிமன்றமும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது; முன்னைவிட இன்னும் சீற்றமாக இருங்கன்னு நிறைய நேரம் அட்வைஸ் செய்தாராம்.. இதன்பின்னர்தான் அட நம்மையும் இவ்வளவு பேர் ஆதரிக்கிறாங்களேன்னு நம்பிக்கையோடு அடுத்த அஸ்திரத்தை கையில் வைத்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசினாராம் சசிகலா புஷ்பா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications