ஆட்டத்தை கலைத்து போடும் 5 தலைகள்.. காஷ்மீரில் கிங் மேக்கராக உருவெடுப்பது யார்! இதை எதிர்பார்க்கல
ஸ்ரீநகர்: காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்படலாம். அதேநேரம் அங்குச் சிறு கட்சிகளின் செல்வாக்கு இந்த முறை கணிசமாக அதிகரித்துள்ளது அங்குக் களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இந்த கட்சிகள் சிறியதாக இருந்தாலும், கிங் மேக்கர்களாக மாறி பெரிய கட்சிகளுக்குத் தலைவலியாக மாறலாம்.
காஷ்மீரில் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் அக். 8ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை அங்குப் பல கட்சிகள் களத்தில் உள்ளன. பிரதான கட்சிகளைத் தாண்டி பல சிறு கட்சிகளும் களத்தில் இருக்கிறது.

குறிப்பாக மக்கள் மாநாடு (பிசி), அப்னி கட்சி, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) மற்றும் அவாமி இத்தேஹாத் கட்சி ஆகியவை இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்த கட்சிகள் குறித்தும் இவை காஷ்மீர் தேர்தலில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
மக்கள் மாநாட்டு கட்சி: அப்துல் கானி தொடங்கிய மக்கள் மாநாடு கட்சித் தலைவராக அவரது மகன் சஜ்ஜத் லோனி இருக்கிறார். கடந்த 2014ல் பிடிபி-பாஜக கூட்டணி அரசு அமைந்த போது இந்த மக்கள் கட்சி முக்கிய பங்கு வகித்தது. காஷ்மீர் அரசில் மக்கள் கட்சி அங்கம் வகித்த நிலையில், சஜ்ஜித் அமைச்சராகவும் இருந்தார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு தனது கட்சியை வளர்க்க அவர் பல நடவடிக்கைகளை எடுத்தார். இருந்த போதிலும் 2024 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. ஆனாலும், சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கிங் மேக்கராக ஆக முடியும் என்ற நம்பிக்கையில் 22 இடங்களில் நம்பிக்கையுடன் களமிறங்குகிறார்.
அப்னி கட்சி: முன்னாள் அமைச்சர் அல்தாஃப் புகாரி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடனேயே அப்னி கட்சியைத் தொடங்கினார். மேலும், கையோடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துவிட்டு வந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. எனவே, இந்தத் தேர்தல் அப்னி கட்சிக்கு முக்கியமானது. காஷ்மீரில் 40 மற்றும் ஜம்முவில் 20 என மொத்தம் 60 சீட்களில் போட்டியிடும் அப்னி கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாகவே இருக்கப் போகிறது.
குலாம் நபி ஆசாத்: காஷ்மீரின் மிக முக்கிய தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கடந்த 50 ஆண்டுகளாகக் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தார். இருப்பினும், அவர் கடந்த 2022இல் காங்கிரஸில் இருந்து விலகித் தனிக் கட்சி தொடங்கினார்.. காஷ்மீரில் ஒரு வலிமையான கட்சியாக ஆசாத் உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவரால் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. லோக்சபா தேர்தலில் தோல்வியே கிடைத்தது. ஆனால், சட்டசபைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அவர் களமிறங்கியுள்ளார்.
அவாமி இட்டேஹாத் கட்சி: இந்தத் தேர்தலில் அவாமி இட்டேஹாத் கட்சியின் பங்கு முக்கியமானதாக இருக்கும். ரஷீத் என்பவர் கடந்த 2012இல் அவாமி இட்டேஹாத் கட்சியை நிறுவினார். வடக்கு காஷ்மீரில் மிக முக்கிய தலைவராக ரஷீத் பார்க்கப்படுகிறார். கடந்த 2009 மற்றும் 2014 சட்டசபைத் தேர்தல்களில் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருந்தார். 2019 லோக்சபா தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
இந்தச் சூழலில் 2024 லோக்சபா தேர்தலில் திகார் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வென்றார். அதுவும் தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் கட்சியின் சஜாத் லோனை தோற்கடித்து இருந்தார். இப்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து காஷ்மீரில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இவரது கட்சி நிச்சயம் குறிப்பிடத் தகுந்த இடங்களில் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகள்: கடந்த 2019ல் குறைந்த கட்சிகள் போட்டியிட்ட போதிலும் கூட்டணி அரசே அமைந்தது. இந்த முறை இதுபோன்ற வலிமையான சிறு கட்சிகள் களத்தில் இருப்பதால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புகள் அதிகம். அப்படி அமையும்பட்சத்தில் இந்த கட்சிகள் கிங் மேக்கராக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications