For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரியங்காவின் ‛பக்கா’ ஸ்கெட்ச்.. இமாச்சலில் பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்.. வெற்றியின் ரகசியம் இதுதான்!

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இது ஓரளவு ஆறுதலான விஷயமாகும். இந்நிலையில் தான் பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் பாஜக கோட்டை விட்ட முக்கிய 5 காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இருககட்சிகளின் வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

தட்டி தூக்கிய காங்கிரஸ்.. மடமடவென சரிந்த பாஜக செல்வாக்கு.. இமாச்சல் தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்தட்டி தூக்கிய காங்கிரஸ்.. மடமடவென சரிந்த பாஜக செல்வாக்கு.. இமாச்சல் தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்

இமாச்சலில் அசத்தலாக வென்ற காங்கிரஸ்

இமாச்சலில் அசத்தலாக வென்ற காங்கிரஸ்

இதனால் இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமையலாம் என கூறப்பட்டது. ஏனென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் 30 முதல் 34 சட்டசபை தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தன. இறுதியாக இந்த தேர்தலில் கருத்து கணிப்புகளை புறம்தள்ளி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேச மாநிலத்தில் 40 தொகுதிகளில் வென்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் முன்னிலையில் இருந்தனர். ஆம்ஆத்மி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

தொடர் தோல்விக்கு நடுவே ஆறுதல்

தொடர் தோல்விக்கு நடுவே ஆறுதல்

இதனால் இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. மேலும் உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு தற்போது நடந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்தமாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்துள்ளது. இதற்கிடையே தான் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலான ஒன்றாக உள்ளது.

காங்கிரஸ் வென்றது எப்படி?

காங்கிரஸ் வென்றது எப்படி?

இந்நிலையில் தான் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எப்படி வெற்றி பெற்றது? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிவித்தபோதே இமாச்சல பிரதேசத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது. சொல்லப்போனால் குஜராத் மாநில தேர்தலை கண்டுக்கொள்ளாத நிலையில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாததை உணர்ந்த காங்கிரஸ், இமாச்சலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என் முனைப்பில் தீவிரம் காட்டியது. மேலும் பிரியங்கா காந்தி தலைமை பொறுப்பு ஏற்று இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் செய்து வந்தார். இவர் குஜராத்தை காட்டிலும் இமாச்சலில் அதிதீவிரமாக செயல்பட்டார். உள்ளூர் தலைவர்களுடன் கலந்துரையாடி வியூகங்களை வகுத்தார். மேலும் உள்ளூர் பிரச்சனைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்ததில் முக்கிய பங்காற்றினார். இது காங்கிரஸ் கட்சிக்கு நன்கு கைக்கொடுத்துள்ளது.

உள்ளூர் பிரச்சனைகளில் கவனம்

உள்ளூர் பிரச்சனைகளில் கவனம்

மேலும் காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுள்ளது. பொதுவான விஷயங்களை பேசுவதை விட்டு மாநிலத்தில் உள்ள குறைகளை பேச வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டது. அதன்படி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சனையை காங்கிரஸ் கையில் எடுத்தது. அதன்படி அரசு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப்படும். முதல் அமைச்சரவை கூட்டத்தின் மூலம் ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.10 கோடியில் இளைஞர்களுக்கு உதவும் வகையில் 'ஸ்டார்ட்அப் பண்ட்' நிதி மையம் திறக்கபப்டும் என அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.

அரசு ஊழியர்களிடம் ஆதரவு

அரசு ஊழியர்களிடம் ஆதரவு

மேலும் இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் அரசு வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். மேலும் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகவே உள்ளது. இதனால் அவர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியது. ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும் நிலையில் அங்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சத்தீஸ்கார், ராஜஸ்தான் வரிசையில் இமாச்சல பிரதேசத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் ஓட்டளித்துள்ளனர்.

ஆப்பிள் விவசாயிகளின் நம்பிக்கை

ஆப்பிள் விவசாயிகளின் நம்பிக்கை

மேலும் இமாச்சலில் பிரதான தொழிலாக உள்ள ஆப்பிள் விவசாயிகளை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதன்படி மாநிலத்தில் ஆப்பிள் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட தோட்டக்கலை ஆணையம் அமைக்கப்பட்டு ஆப்பிள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும். இது இமாச்சலில் ஆப்பிள் கொள்முதலில் அதிகம் ஈடுபடும் அதானியின் நிறுவனமாக இருந்தாலும் கட்டாயமாக பின்பற்ற வைக்கப்படும் என கூறியது. அதோடு ஆப்பிளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இது ஆப்பிள் விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுத்த நிலையில் அட்டை பெட்டியில் வைத்து ஆப்பிள் விற்பனை செய்வதற்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்த பாஜகவை ஆட்சியில் இருந்து புறம்தள்ள செய்துள்ளது.

 மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500

மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500

மேலும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,500 உதவித்தொகை வழங்கப்படும். வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மேலும் வீடு ஒன்றுக்கு 4 மாடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்து இருந்தது. இது இல்லத்தரசிகளின் மனதை வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுக்களாக மாறி ‛கை' சின்னத்தை வெற்றி பெற செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Congress party has won the Himachal Pradesh state assembly elections. This is somewhat of a consolation for the Congress party, which has been facing repeated defeats. In this case, the main 5 reasons why the BJP left its stronghold in Himachal Pradesh, the home state of BJP leader JP Natta, have now been revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X