லிவ் இன் ரிலேஷன் செய்யும் இளைஞர்கள் பற்றி பெற்றோரிடம் தகவல் சொல்லனும்- உத்தரகாண்ட பொது சிவில் சட்டம்
டேராடூன்: உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் நிலையில் இனி திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு சட்டப்படி அனுமதி பெற வேண்டும் என்பதால் இது பெற்றோருக்கு அவமானத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும் செயலாகவே கருதப்படுகிறது. அதே வேளையில் இலைமறைவு காய் மறைவாக இருந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவே சமூக ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.
உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த மசோதா கடந்த ஆண்டு முதல்வர் புஷ்கர் சிங் தமி தாக்கல் செய்த நிலையில் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்த மசோதாவின் அச்சுறுத்தும் அம்சமாக உள்ளது லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவில் இருப்பவர்கள் தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதாகும். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். லிவ் இன் உறவில் இருப்பவர்கள் பெண்ணாக இருந்தால் 18 வயதுக்கு கீழும் ஆணாக இருந்தால் 21 வயதுக்கு கீழும் இருத்தல் கூடாது. 18 வயது முதல் 21 வயதுள்ளோராக இருந்தால் இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அவர்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படும்.
ஒரு வேளை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் பதிவு செய்யாதது தெரியவந்தால் பொது சிவில் சட்டத்தின்படி அதிகபட்சமாக 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் பதிவாளரிடம் அளிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருந்தால் ரூ 25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பதுதான் இந்த சட்ட மசோதா.
எல்லாவற்றுக்கும் மேல் லிவ் இன் உறவில் பிறக்கும் குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தையாகவே கருதப்படுவார்கள். அதே போல் லிவ் இன் உறவில் இருக்கும் பெண் தனித்து விடப்பட்டால் அவர் நீதிமன்றத்தை நாடி தனக்கான பராமரிப்பு தொகையை தனது இணையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மசோதாவை பொருத்தமட்டில் சமூக சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக இலைமறைவு காய் மறைவாக இருந்த லிவ் இன் உறவுகள், இனி அதிகரிக்க தொடங்கும். பெற்றோரையும் மீறி அரசின் துணையுடன் இவர்கள் ஒரே வீட்டில் வசிக்க தொடங்குவார்கள்.
எந்த விதத்தில் பார்த்தாலும் ஊரறிய பெற்றோரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் லிவ் இன் ரிலேஷன்ஷிப்கள் அதிகம் முளைக்க ஆரம்பிக்கும். மேலும் திருமண பந்தம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். யாருக்கு யாரை பிடிக்கிறதோ அவர்கள் அவருடன் வாழலாம். பிடிக்காவிட்டால் வேறொருவருடன் வாழலாம் என்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடும். எனவே இந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப் சட்டத்தை பழமைவாதிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள்.
சமூக சீர்கேட்டை, கலாச்சார சீரழிவை ஒரு மாநில அரசே சட்டமாக இயற்றும் போது பெற்றோர்கள் தலையில் இடியை இறக்கியது போல் உள்ளதாகவே இந்த சட்டம் கருதப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications