Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஜ்ஜைன் கொடூரம்! ரத்தம் வழிந்த சிறுமிக்கு 5,10 தந்த மக்கள்! இது உதவியாம்.. ஆடை தந்தது பூசாரி மட்டுமே

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு உதவி கேட்ட சிறுமிக்கு அப்பகுதியில் இருந்த பலரும் காசு கொடுத்து உதவ முன்வந்துள்ளனர். யாரும் அந்த சிறுமிக்கு ஆடைகளைத் தர வேண்டும் என நினைக்கவில்லை என்பது பெருந்துரயரம்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறிய சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குப் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வீதி வீதியாக உதவி கேட்டுச் சுற்றியுள்ளார்.

 How Ujjain rape survivor was helped by priest and other people

கிழிந்த ஆடைகளுடன், ரத்தம் வழிய அந்த சிறுமி பலரிடமும் உதவி கேட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

5, 10 கொடுப்பது உதவியா: இதில் துயரம் என்னவென்றால் யாருமே அந்த சிறுமிக்கு உதவ முன்வரவில்லை. சிலர் அந்த சிறுமியை விரட்டி விடுவதையும் பார்க்க முடிகிறது. வீதி வீதியாகப் பலரிடமும் அந்த சிறுமி உதவி கேட்டுள்ளார். சுமார் 8 கிமீ தூரத்திற்கு அந்த சிறுமி இப்படியே நடந்து சென்றுள்ளார். அதன் பிறகே அங்கிருந்த கோயில் சாமியார் ஒருவர் அந்த சிறுமிக்கு ஆடை கொடுத்தும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் உதவியிருக்கிறார்.

இந்த சம்பவம் நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது. ரத்தம் வழிய இருக்கும் சிறுமிக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இதற்கிடையே அங்கிருந்த சிலர் மைனர் சிறுமிக்கு 5,10 ரூபாய் கொடுத்து உதவ முன்வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மைனர் சிறுமியை உதவி கேட்டதற்குப் பலரும் பணம் கொடுத்த உதவியதாக உஜ்ஜையினின் காவல் கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்தார்.

நெட்டிசன்கள்: இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, அப்பகுதி மக்கள் தங்கள் பணம் கொடுத்த உதவ முன்வந்ததாகத் தெரிவித்தனர். இருப்பினும், ரத்தம் வழியச் சிறுமி ஒருவர் உதவி கேட்கும் போது, அவருக்கு ஆடைகளைத் தந்திருக்கலாம். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அல்லது குறைந்தது போலீசாருக்காவது கால் செய்திருக்கலாம்.. இருப்பினும், அந்த மக்கள் பணத்தைத் தர முன்வருவது சரியான நடைமுறை இல்லை என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

அந்த சிறுமிக்கு அங்கிருந்த பூசாரி ஒருவரே உதவியிருக்கிறார். ஆடைகளை அளித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீசாருக்கும் கால் செய்துள்ளார். இது குறித்து அந்த பூசாரி கூறுகையில், "திங்கள் காலை 9.30 மணியளவில் நான் ஆசிரமத்தில் இருந்து கிளம்பிய போதுதான் நான் அந்த சிறுமியைப் பார்த்தேன். அந்த சிறுமி அரை நிர்வாணமாக இருந்தார். ரத்தம் வழியக் கதவுக்கு அருகே அந்த சிறுமி நின்று கொண்டிருந்தார்.

பூசாரி: அவரால் பேசக்கூட முடியவில்லை.. அவள் கண்கள் வீங்கியிருந்தன. இதையடுத்து என் உடைகளை அவருக்குக் கொடுத்துவிட்டு 100க்கு போன் செய்தேன். இருப்பினும், போலீசாரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து நேரடியாக உள்ளூர் போலீஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன். அவர்கள் 20 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். நாங்கள் பெயரைத் தான் கேட்டோம். ஆனால், அவரால் அதைக் கூடச் சொல்ல முடியவில்லை. அவ்வளவு பயந்து போய் இருந்தார்.

போலீசார் வரும் வரை நாங்கள் காத்திருந்தோம். அப்போது யாராவது அந்த சிறுமி குறித்துக் கேட்க அருகில் வரும்போதெல்லாம் சிறுமி எனது பின்னால் ஒழிந்து கொள்வார். அந்தளவுக்குப் பயந்து போய் இருந்தார். போலீசார் அங்கே வந்து சிறுமியை அழைத்துச் சென்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

சரியான உதவி இதுதான்: நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவத்தில் அந்த சிறுமிக்குத் தேவையான உதவிகளை யாரும் செய்யவில்லை. பொதுமக்கள் 10 ரூபாய், 20 ரூபாய் கொடுத்துள்ளதை போலீசார் ஹெல்ப் என்று கூறுகிறார்கள்.. ஆனால் நிஜமான ஹெல்ப் என்பது ஆடை தருவதுதான். அதை 8 கிமீ-க்கு அந்த சிறுமி நடந்து செல்லும் வரை யாருமே தரவில்லை. இந்த சாமியார் தான் செய்துள்ளார். சரியான நேரத்தில் சரியான முறையில் உதவிய இவரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+