பறந்து வந்த ஹெலிகாப்டர்.. இந்தியா வந்த இஸ்ரேல் கப்பலை ஏமன் ஹவுதிகள் கடத்தியது எப்படி? ஷாக் வீடியோ
செங்கடல்: இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவரின் கப்பலை ஏமனின் ஹவுதி கிளர்ச்சி படையை சேர்ந்தவர்கள் நடுக்கடலில் கடத்தியதோடு கப்பல் பணியாளர்கள் 25 பேரை பணையக் கைதிகளாக பிடித்து சென்றனர். இந்நிலையில் தான் அவர்கள் கப்பலை எப்படி கடத்தினர் என்பது குறித்த ஷாக் வீடியோ வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை அவர்கள் ஏவி தாக்கினர்.

மேலும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் 240 பேரை பணையக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் கொதித்துப்போன இஸ்ரேல் போர் தொடங்கியதாக கூறி காசா மீது தாக்குதலை தொடர்ந்தது.
இஸ்ரேல் சார்பில் முதலில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்தும் நடக்கும் இந்த மோதலில் இருதரப்பிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.
கடந்த மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை இந்தியா கண்டித்ததோடு, இக்கட்டான நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக இந்தியா தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கிய நிலையில் இரு தரப்பும் மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய வழிவகுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. இருப்பினும் இருதரப்பும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில் தான் செங்கடல் பகுதியான பாப் அல்-மன்டேப் எனும் இடத்தில் இஸ்ரேலை சேர்ந்த மிகப்பெரிய கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. ‛கேலக்ஸி லீடர்' என பெயரிடப்பட்ட இந்த கப்பல் 189 மீட்டர் நீளம் (620 அடி) கொண்டது. கார்களை ஏற்றி செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த கப்பல் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டது. இந்த கப்பலுக்குள் நுழைந்த ஒரு கும்பல் 25 பணியாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தி சென்றது. அதோடு ஏமன் நாட்டு துறைமுகமான ஹொடெய்டா நோக்கி இயக்க உத்தரவிட்டது.
இதுபற்றிய விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் கப்பலை கடத்தியது ஏமன் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படையினர் என்பது தெரியவந்தது. அதாவது காசாவில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அந்நாட்டின் கப்பலை கடத்தியது தெரியவந்தது.
— 🇮🇱/🇾🇪 WATCH: Yemen's Ansarullah board and seize the Israeli-owned ship 'Galaxy Leader' in Bab Al-Mandeb
— World Observer (@WorldObserver0) November 20, 2023
One of the Yemeni soldiers shouts 'we are at your service, dear Gaza!' while walking into the cargo deck. The helicopter also bears the Palestinian flag. pic.twitter.com/8EcLwyluhd
அதோடு இஸ்ரேல் தனது தாக்குதலை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டலால் இதுபோல் இஸ்ரேல் நாட்டு கப்பல்கள் கடத்தப்படும் என ஏமன் ஹவுதி கிளர்ச்சி படை எச்சரித்துள்ளது. இதற்கிடையே தான் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பலை ஏமன் கிளர்ச்சி படையை சேர்ந்தவர்கள் கடத்தியது குறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது அவர்கள் ஹெலிகாப்டரில் வந்து கப்பலில் தரையிறங்கி கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில் இஸ்ரேல் கப்பலை பின்தொடர்ந்து ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்து வருகிறது. இந்த ஹெலிகாப்டர் கப்பலின் மேல்பகுதியில் தரையிறங்கிய நிலையில் அதில் இருந்து ஏமன் கிளர்ச்சி படையினர் கப்பலில் குதிக்கின்றனர். அவர்கள் தங்களின் முகத்தில் கருப்பு பட்டை அணிந்து மறைந்து இருந்ததோடு, கையில் துப்பாக்கி வைத்திருக்கின்றனர்.
அதன்பிறகு அவர்கள் படிப்படியாக கப்பலில் துப்பாக்கிச்சூடு நடத்துவதுவது போல் தொடர்ந்து, கப்பல் இயக்கும் என்ஜின் பகுதிக்கு சென்று அதன் கதவை உடைத்து உள்ளே நுழைகின்றனர். இதை பார்த்த கப்பல் பணியாளர்கள் பயந்துபோய் தங்களின் கைகளை உயர்த்தி அவர்களிடம் சரணடைகின்றனர். பணியாளர்களை சிறை பிடித்த அந்த கும்பல் கப்பலையும் கடத்தி சென்றது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications