3 அடி பனியில் அதிசயம்! பிரசவ வலியால் துடித்த பெண்ணை தோளில் சுமந்தது உயிர் காத்த ராணுவ வீரர்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் நிலவும் கடும் குளிரை பற்றி சொல்லவே தேவையில்லை.. ஆள் உயரத்திற்கு மேலாக கொட்டிக் கிடக்கும் பனிப் பொழிவும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை முடக்கிப் போடுவது வழக்கம். ஆனால், அங்குள்ள மக்களுக்கு ராணுவம் என்பது வெறும் பாதுகாப்பு அரண் மட்டுமல்ல, இக்கட்டான சூழலில் உயிர் காக்கும் கடவுளாகவும் விளங்குகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அங்கு நடந்துள்ளது..
கடந்த 2022-ல் ஜம்மு காஷ்மீரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. அங்குள்ள சோபியானில் உள்ளது சைனார் கார்ப்ஸ் என்ற ராணுவ பயிற்சி மையம். இந்த மையத்திற்கு ராம்நகரி பகுதியிலிருந்து, திடீரென ஒருநாள் ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர், ராம்நகரில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி வந்துவிட்டதாகவும் அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.. பனிப்பொழிவு ஜம்முவில் பனி, மழையை போல் பொழிந்த, வெப்பநிலையும் மைனஸில் சென்றுவிட்டது. அந்த நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவ ராணுவ வீரர்கள் முன்வந்தனர்.
பிரசவ வலி - கர்ப்பிணி
உடனடியாக ராம்நகரி பகுதிக்கு ஸ்ட்ரெச்சருடன் சென்று, அங்கு பிரசவ வலியில் தவித்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தனர்.. வழிநெடுகிலும் பனிப்பொழிந்த சாலையில் அந்த பெண்ணை சுமந்து கொண்டு சோபியான் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
அடுத்த சிறிது நேரத்தில், அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் ராணுவ வீரர்கள் அந்த கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்த்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.. இந்த செய்தி அப்போது சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது நினைவிருக்கலாம்.
3 அடி உயரம்
அதேபோன்ற சம்பவம்தான் தற்போது மீண்டும் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்துள்ளது.. சுமார் 3 அடி உயரத்திற்குப் பனி படர்ந்து, சாலைப் போக்குவரத்தே முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு கர்ப்பிணித் தாயின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. பிரசவ வலி தாள முடியாமல் அவர் தவித்தபோது, அந்தப் பனிப் பாலைவனத்தில் அவருக்கு உதவியாக வந்தது இந்திய ராணுவம்.
அந்த பெண் வசிக்கும் கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல வேறு வழியே இல்லை. ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாத அளவிற்குப் பனி மூடியிருந்தது. தகவலறிந்த ராணுவ வீரர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் களத்தில் இறங்கினார்கள்.. அந்த நேரத்தில் எந்திரங்கள், வாகனங்கள் என எதையுமே எதிர்பார்க்கவில்லை, மாறாக தங்களின் தோள்களையே ஆம்புலன்ஸாக மாற்றினார்கள்..
வயிற்றிலுள்ள சிசு
ஒரு படுக்கையை போல உருவாக்கி, அதில் அந்த கர்ப்பிணி பெண்ணை படுக்க வைத்து, கடும் பனியிலும் குளிரிலும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.. ஒவ்வொரு அடியும் ஒரு போராட்டமாக இருந்தது. கால்கள் பனியில் புதைய, சறுக்கலான பாதைகளில் நிதானத்துடன் அப்பெண்ணின் உயிரையும், அவர் வயிற்றிலுள்ள சிசுவின் உயிரையும் காப்பதே அவர்களின் ஒரே இலக்காக இருந்தது.
மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்த்ததால், அந்தப் பெண்ணிற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தாயை சுமந்து சென்ற மென்மை
சுமார் பல கிலோமீட்டர் தூரம் இத்தகைய சவாலான சூழலில் ராணுவ வீரர்கள் அந்த பெண்ணை சுமந்து சென்ற காட்சி, அங்கிருந்த உள்ளூர்வாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது...!!
ராணுவம் என்பது போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்துவது மட்டுமல்ல, இயற்கைப் பேரிடர் காலங்களில் சொந்த நாட்டு மக்களை காப்பதிலும் அவர்கள் முன்னோடியாக திகழ்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது... துப்பாக்கி ஏந்திய கைகள், ஒரு தாயைச் சுமந்து செல்லும் மென்மையையும் கொண்டுள்ளன என்பதை இந்த நிகழ்வு உலகுக்கு உணர்த்தி உள்ளது...!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications