மயக்க மருந்து "சாக்லெட்" கொடுத்து மனைவியை நண்பருக்கு இரையாக்கிய கணவர் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மனைவிக்கு தெரியாமல் சாக்லெட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது நண்பரை உல்லாசம் அனுபவிக்க செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டம், பாபா நகரைச் சேர்ந்தவர் சலீம் மொகைதீன்(30). இவருக்கு கடந்த ஆண்டு அதேபகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது.

Husband held for abetting rape of wife

திருமணத்திற்கு பின்னர் சலீம் மொகைதீன், எம்.டெக் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார். அங்கிருந்து தனது மனைவியுடன் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். அவ்வப்போது ஆபாசமான முறையில் பேசி மனைவியை நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாரும் கூறி வந்துள்ளார். அதை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளை தனது நண்பர்களுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் இருந்து ஹைதராபாத் வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சலீம் மொகைதீன் தனது நண்பரான முகமது ஷானை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது சலீம் மொகைதீன் மயக்க மருந்து கலந்த சாக்லெட்டை தனது மனைவிக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் முகமதுஷானை தனது மனைவியுடன் உல்லாசமாக இருக்கும்படி கூறியுள்ளார். இதையும் சலீம் மொகைதீன் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் இதை காட்டி தான் கூறும் நண்பர்களுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என மனைவியை மிரட்டி வந்துள்ளார்.

இதனால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளான அவரது மனைவி கன்சன்வாகு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார். அதன்பேரில், தெற்கு மண்டல துணை ஆணையாளர் சத்தியநாராயாணா விசாரணை நடத்தி சலீம் மொகைதீனை செவ்வாய்க்கிழமை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள முகமதுஷானை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+