For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லேட்டா எழுந்ததோட ருசியா சமைக்கல... நீதிபதிகளையே அதிர்ச்சியடைய வைத்த வித்தியாச விவாகரத்து மனு!

மனைவி சீக்கிரமாக எழுந்து ருசியா சமைத்துத் தரவில்லை என்று மும்பையை சேர்ந்த கணவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது மகன் கொலை- வீடியோ

    மும்பை : வேலைக்குச் செல்லும் மனைவி பணி முடிந்து வீடு திரும்பியவுடன் தூங்கி எழுந்து தாமதமாக உணவு தயாரித்து தருவதோடு அது ருசியாகவும் இல்லை என்று மும்பையை சேர்ந்த கணவன் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி காலையில் தாமதமாக எழுவதும் இல்லை ருசியாக சமைத்து தருவதும் இல்லை என்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் விவாகரத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    சான்டாக்ரூஸ் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கேகே டேடட் மற்றும் சரங் கோத்வால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தன்னுடைய மனைவி வேலைக்கு செல்வதால் இரவு நேரத்தில் தாமதமாகவே உணவு சமைத்து தருவதாகவும் அவை ருசியானதாக இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    பெற்றோரின் வாக்குமூலம் சான்று

    பெற்றோரின் வாக்குமூலம் சான்று

    இதற்கு ஆதாரங்களாக தன்னுடைய பெற்றோரின் வாக்குமூலங்களையும் அவர் அளித்திருந்தார். அவர்களும் தங்களை மருமகள் சரியாக பராமரிப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

    பணிக்கு செல்வதோடு கூடுதலாக குடும்ப பாரம்

    பணிக்கு செல்வதோடு கூடுதலாக குடும்ப பாரம்

    இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளித்த மனுதாரரின் மனைவி தான் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் தானே செய்வதாக கூறியுள்ளார். மளிகை பொருட்கள் வாங்குவது, சமையல் செய்வது, மாமனார் மாமியாரை பார்த்துக் கொள்வது என்று அனைத்து பொறுப்புகளுமே தன் மீது சுமதப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

    மனைவி வாதம்

    மனைவி வாதம்

    மனுதாரரின் மனைவியும் தனக்கு ஆதரவான வாக்குமூலங்களாக அக்கம்பக்கத்து வீட்டினரின் கருத்துகளை தாக்கல் செய்திருந்தார். அண்டை வீட்டாரும் அந்தப் பெண் எப்போதுமே ஏதாவது ஒரு வீட்டு வேலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மனு தள்ளுபடி

    மனு தள்ளுபடி

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணிக்கு செல்லும் பெண் வீட்டு வேலைகளையும் கூடுதலாக பார்த்துக் கொண் குடும்பத்தாரை கவனித்து வருகிறார். மனுதாரர் விவகாரத்துக்காக கோரும் காரணம் அடிப்படை முகாந்திரம் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    English summary
    Bombay high court has dismissed a plea for divorce from his wife on the allegations that she used to wake up late and that she did not cook tasty food.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X