விரைந்து வரும் ரயிலுடன் ஒரு செல்பி... படுகாயமடைந்த ஹைதராபாத் மாணவன்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் விரைந்து வரும் ரயிலுடன் ஒரு செல்பி எடுக்க விரும்பிய மாணவன் மீது ரயில் மோதியதில் படுகாயமடைந்தார்.
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது செல்பி எடுக்க முயன்ற மாணவன் மீது ரயில் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
மாணவர்கள், இளைஞர்கள் தங்களிடம் உள்ள நவீன போன்களை கொண்டு செல்பி எடுப்பதும் அதை சமூக வலைதளங்களில் பகிருவதுமாக உள்ளனர். இதன் மோகம் மலை உச்சியில் நின்று எடுப்பது, குளிக்கும் போது ஆற்று நீரில் எடுப்பது, கடல் அலையில் எடுப்பது, காட்டு விலங்குகளுடன் எடுப்பது என பல வகைகளில் எடுக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையானதாகிவிட்டது.

ஹைதராபாதில் பாரதிநகர் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தன் நண்பர்களுடன் இருந்த சிவா என்ற மாணவன் ரயில் வரும் போது அதனுடன் செல்பி வீடியோ எடுக்க வேண்டும் என்று தண்டவாளத்தில் நின்றார். நண்பர்கள் எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.
இதைத் தொடர்ந்து செல்பி வீடியோ எடுக்க சென்ற போது ரயில் வேகமாக வருவதை பார்த்தபோதிலும் சிவா அசராமல் கமென்டரி கொடுத்தவாறே நின்றிருந்தார். அப்போது நண்பர்கள் கூறியும் கேட்கவில்லை.
சற்றும் எதிர்பாராத நிலையில் சிவா மீது ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications