ஹைப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படுகிறது!!
பெங்களூரு: இந்தியா உருவாக்கி வரும் மிக அதிவேக ஏவுகணையான "ஹைப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை"க்கு மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட உள்ளது.
இது குறித்து நமது ஒன் இந்தியா இணையதளத்துக்கு பிரமோஸ் முதன்மை செயல் அதிகாரி சுதிர்குமார் மிஸ்ரா கூறியதாவது:
சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை ஹைப்பர்சோனிக்- மிக அதிவேக ஏவுகணையாக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அது வெற்றிகரமாக முடிவடையும் போது அந்த ஏவுகணைக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும்.

இந்தியா அதிவேக ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும் என்பது அப்துல்கலாமின் கனவு. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை உருவாக்கியவர் அப்துல்கலாம். அவரது சிந்தனையில் உதித்ததுதான் பிரமோஸ் ஏவுகணைகள்.
புதிய ஹைப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டுவதன் மூலம் இளையதலைமுறை விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் கிடைக்கும்.
இவ்வாறு சுதிர்குமார் மிஸ்ரா கூறினார்.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிக அதிவேக ஏவுகணை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் இதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளில் மிக அதிவேக ஏவுகணையை உருவாக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறக் கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இது மணிக்கு 8 ஆயிரத்து 575 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இதை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்து வருகிறது. அதிவேகத்தில் சென்று பதுங்கு குழிகள் உள்ளிட்ட எதிரிகளின் இலக்கை அழிக்கும் வல்லமை கொண்டது இந்த ஏவுகணை.
1998ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது, பிரமோஸ் 2 ஏவுகணை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அரசு பிரதிநிதியுடன் அவர் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications