ரகுராம் ராஜனின் முடிவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது - ப.சிதம்பரம்
டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2வது முறையாக பதவி வகிக்க விருப்பமில்லை என்று ரகுராம் ராஜன் கூறியதற்கு ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார், மேலும் அவரது முடிவால் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பல்வேறு செயலாளர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் ரகுராம் ராஜன் ஆளுநராகவே தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், தாம் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் 2-வது முறையாக நீடிக்க விரும்பவில்லை எனக் கூறினார். இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் விலக இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. 2-வது முறையாக ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்ற அவரது இந்த முடிவு ஆழ்ந்த வருத்தத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் நான் ஆச்சரியமடையவில்லை
எனினும், இது எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அல்ல. ஒரு மிகச்சிறந்த பொருளாதார வல்லுனரை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அரசு விமர்சனம் செய்திருக்கிறது. நான் ஏற்கெனவே முன்பு தெரிவித்தது போல் இந்த அரசு ரகுராம் ராஜன் போன்ற ஒருவருக்குத் தகுதியுடையதல்ல. எது எப்படியிருந்தாலும் இந்தியாவுக்குத்தான் இழப்பு என்றார். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications