For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எக்ஸிட் போலை நம்பாதீங்க.. பின்னணியில் இப்படி ஒரு சதி இருக்கு.. மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்பு முடிவுகள்

    கொல்கத்தா: எக்ஸிட் போல் வதந்தி வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்ய பயன்படும் யுக்தி என்று கடுமையாக சாடியுள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான, மமதா பானர்ஜி.

    லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று நிறைவுற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணி முதல் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

     I don’t trust Exit Poll gossip, says Mamata Banerjee

    பெரும்பாலான, தொலைக்காட்சி சேனல், கருத்துக் கணிப்பு முடிவுகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மமதா பானர்ஜி வெளியிட்ட ட்வீட்டை பாருங்கள்: எக்ஸிட்போல் எனப்படும் கருத்துக்கணிப்பு வதந்தியை, நான் நம்பவில்லை. இந்த வதந்தி மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்வது அல்லது அவற்றை மாற்றிவிடுவது கேம் பிளானாக இருக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமை, வலுவாக மற்றும் தைரியமாக இருக்க நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் ஒன்றாக இந்த போராட்டத்தை எதிர்கொள்வோம். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மக்கள் மனதில் பாஜக கூட்டணிதான் வெல்லப்போகிறது என்ற தோற்றத்தை உருவாக்கினால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்தாலும், அது மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தை இவ்வாறு மமதா பானர்ஜி பதிவு செய்துள்ளார்.

    English summary
    I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together, says Mamata Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X