பிரதமராக எனக்கு விருப்பமில்லை... எம்.பியாக மட்டுமே ஆசை - நிதிஷ்குமார்
பாட்னா: தனக்கு எம்.பியாகும் ஆசை மட்டுமே இருப்பதாகவும் பிரதமராக விரும்பவில்லை என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தற்போது செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாரதீய ஜனதா இல்லாத கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் நிறுத்தப்படுவார் என்று ஊகங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தனக்கு எம்.பியாகும் ஆசை மட்டுமே இருப்பதாகவும் பிரதமராக விரும்பவில்லை என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பாட்னாவில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிதிஷ்குமார் கூறுகையில், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் ஆக வேண்டும் என்று நான் ஒரு போதும் கனவு கண்டதில்லை. வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது எம்.பியாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை உள்ளது. சிலர் தேவையில்லாமல் இதுபோல் (பிரதமராக விரும்புவதாக) பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications