காமென்வெல்த் மாநாட்டில் பங்கேற்பேன், அப்பொழுது தானே...: அமைச்சர் சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil

அடுத்த மாதம் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில்,
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் நான் பங்கேற்பேன். அவ்வாறு பங்கேற்றால் தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச முடியும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications