முட்டை வீச்சுக்கு எல்லாம் நான் அசர மாட்டேன், பாக். நல்ல நாடு தான்: நடிகை ரம்யா
மங்களூரு: முட்டை வீச்சை பார்த்து எல்லாம் நான் பயப்படவும் இல்லை, கவலைப்படவும் இல்லை என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நரகம் அல்ல, அது ஒரு நல்ல நாடு. நான் பாகிஸ்தானுக்கு சென்று பார்த்துள்ளேன். அங்குள்ள மக்களும் நம்மை போன்றவர்கள் தான் என்று நடிகை ரம்யா தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மங்களூருக்கு சென்ற ரம்யா மீது முட்டை வீசப்பட்டது. இது குறித்து ரம்யா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

முட்டை வீச்சு
நான் மங்களூருக்கு வந்தவுடன் என் மீது முட்டைகளை வீசினார்கள். கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்காக எல்லாம் நான் கூறியவற்றை திரும்பப் பெற மாட்டேன். இந்த சம்பவங்களால் நான் கவலை அடையவில்லை.

தேசதுரோக வழக்கு
தேசதுரோக சட்டம் குறித்து நாம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் மீது முட்டை வீசியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தேசதுரோகி
என் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பின்னால் அரசியல் சதி உள்ளது. இது குறித்த புகார் முதலில் மீடியாவுக்கு சென்றது எப்படி நடந்தது. நான் தேசத்திற்கு எதிரானவள் என்பதை முதலில் மீடியாவுக்கு தெரிவிக்க வழக்கறிஞர் விரும்பியுள்ளார்.

பாஜக
பாஜகவினர் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்களை எதிர்க்கிறார்கள். வலது சாரிகள் மட்டுமே எனக்கு எதிரான தேசதுரோக புகாரை ஆதரிக்கிறார்கள். ரம்யா பாகிஸ்தானை ஆதரிக்கிறார் என்று கன்னட சேனல்கள் பெரிதாக செய்தி வெளியிடுகின்றன. அவர்களையும் குறை கூற முடியாது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications