அண்ணன் ராகுல் சொன்னால், மகிழ்ச்சியோடு வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி... பிரியங்கா காந்தி
Recommended Video
கல்பேட்டா: வாரணாசியில் போட்டியிடுமாறு ராகுல் காந்தி சொன்னால் மகிழ்ச்சியோடு போட்டியிடுவேன் என அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு வரும் மே மாதம் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் அங்கு மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுமாறு ராகுல் காந்தி சொன்னால் போட்டியிட தயார் என பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

பிரியங்கா பிரச்சாரம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஒய்ந்த நிலையில், பிரியங்கா காந்தி நேற்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கல்பேட்டாவைச் (வயநாடு தொகுதி) சேர்ந்த வசந்த் குமார் வீட்டு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தேசத்தை காக்க தேர்தல்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தேசத்தை காப்பதற்காக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நாம் மிகப்பெரிய காரியத்துக்காக போராடுகிறோம். நம் மதத்தை, நம் உணவு முறையை, வாழ்க்கை முறையை சுதந்திரமாக வெளிப்படுத்த நமக்கு உரிமை உள்ளது.

பொதுமக்களிடம் அச்ச உணர்வு
நாட்டில் தற்போது மக்களின் உரிமைகளை காக்கும் அதிகார அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் இப்போது மக்களிடம் ஒரு அச்ச உணர்வு திடீரென ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலை சாதாரண தேர்தலாக நாம் கடந்து செல்லக்கூடாது. குறுகிய மணம் படைத்தவர்களிடம் இருந்து இந்த தேசத்தை காக்க போராடும் தேர்தல் இது" என்றார்.

வாரணாசியில் மோடி
அப்போது செய்தியாளர் ஒருவர் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, நீங்கள் பார்க்கதானே போகிறீர்கள். வாரணாசியில் நான் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினால், நான் மகிழ்ச்சியோடு போட்டியிடுவேன்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications