'இலவச கல்விக்கு முதல் மாத சம்பளம்' - ஐஏஎஸ்-ல் முதலிடம் பெற்ற நந்தினி நெகிழ்ச்சி
ஐஏஎஸ் தேர்வில் முதலாவதாக வந்த நந்தினி, தனது முதல் மாத சம்பளத்தை இலவச கல்வித் திட்டத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரு: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பெற்ற மாணவி நந்தினி, தனது முதல் மாத சம்பளத்தை இலவச கல்வி திட்டத்துக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.நந்தினி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தினி, தனது கடின உழைப்பால் கல்வி கற்று, ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பெற்றார்.
இதையடுத்து இவருக்கு கர்நாடகாவில் தொடர் பாராட்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் மங்களூருவில் ஆல்வா தொண்டு நிறுவனத்தின் சார்பில் நந்தினிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அவருக்கு ரூ.1 லட்சம் சன்மானத் தொகை வழங்கப்பட்டது.
இந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்ற நந்தினி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வியும், சுகாதாரமும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க போதிய பணம் இருப்பதில்லை.
ஐஏஎஸ் தேர்வுக்காக நான் தயாரான போது ஆல்வா தொண்டு நிறுவனத்தின் கல்வி ஊக்கத் தொகை உதவியாகக் கிடைத்தது. அதில் நிறைய பொது அறிவு நூல்களை வாங்கி வாசித்தேன்.

தாய்மொழி அறிவு
தினமும் செய்தித்தாள்களை வாங்கி படித்தேன். கன்னட இலக்கிய நூல்களையும் அதிகமாக படித்தேன். தாய்மொழியில் எனக்கு இருந்த அறிவு, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற உதவியாக இருந்தது.

மாணவர்களுக்கு உதவ வேண்டும்
என்னைப் போல ஏழ்மையில் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். எனது சாதனைக்காக வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தை ஏழை மாணவர்களின் கல்வி வசதிக்காக ஆல்வா தொண்டு நிறுவனத்துக்கே வழங்குகிறேன்.

இலவசக் கல்விக்கு முதல் மாத சம்பளம்
இதேபோல எனது முதல் மாத சம்பளத்தையும் இந்தத் நிறுவனத்தின் இலவச கல்வி திட்டத்துக்கு வழங்குவேன். கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிப் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

குவியும் வரவேற்பு பாராட்டு
நந்தினியின் இந்த அறிவிப்பை ஆல்வா தொண்டு நிறுவனம் வரவேற்று பாராட்டியுள்ளது. இதே போல பேஸ்புக், ட்விட்டர் உள் ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் நந்தினிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நந்தினி ஐஏஎஸ்-க்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications