ஜம்மு காஷ்மீர் மக்கள் வாழ்வில் உள்ள இருளை அகற்றுவேன்: மோடி உறுதி
ஜம்மு: பிரதமர்கள் வராத ஜம்மு காஷ்மீருக்கு நான் பதவியேற்ற பிறகு இரண்டு முறை வந்துள்ளேன் என்று லேவில் நடந்த பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நிமூ- பாஸ்கோ நீர் மின் நிலைய திட்டம் மற்றும் சுடாக் நீர் மின் நிலைய திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் பாரம்பரிய உடை அணிந்த மோடி கூட்டத்தில் பேசுகையில்,

லடாக்
லடாக் பகுதி நமக்கு மிகவும் முக்கியமானது. சியாச்சின் விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மேலும் இங்கு போர் நினைவிடம் அமைக்கப்படும்.

பலம்
நான் இந்த பகுதியையும், அதன் பலம், சவால்களையும் நன்கு அறிவேன். பல காலம் கழித்து இந்த இடத்தில் இத்தனை பேர் கூடியுள்ளனர்.

பிரதமர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிரதமர் வர முடியாமல் இருந்தது. ஆனால் நான் பதவியேற்ற பிறகு இரண்டு முறை வந்துள்ளேன்.

பாசம்
உங்களின் பாசத்தை பார்த்து தான் நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு இங்குள்ள மக்களின் பிரச்சனைகள் பற்றி தெரியும். மேலும் இந்த பகுதியின் பலமும் நன்கு தெரியும்.

லடாக்
சூரிய ஒளி திட்டங்களில் லே பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. லே மற்றும் லடாக்கில் மேம்பாட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

முன்னேற்றம்
முன்னேற்றத்தை ஏற்படுத்த ஜம்மு காஷ்மீர் அரசுடன் சேர்ந்து மத்திய அரசு பணியாற்றும். லடாக்கில் உள்ளவர்களின் நாட்டுப்பற்று இந்திய மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. நீங்கள் இந்தியாவுக்கு அளிக்கும் பலத்திற்காக நான் தலை வணங்குகிறேன்.

சுற்றுலாத் துறை
இங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது. விரைவில் ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். லே பகுதி குறித்த வாஜ்பாயின் கனவை நனவாக்குவோம்.

பஷ்மினா சால்வை
ஜம்மு காஷ்மீரின் பஷ்மினா சால்வை இந்தியர்களின் கௌரவம் ஆகும். அதன் டிசைன் மற்றும் தயாரிப்பு நவீனமயமாக்கப்படும்.

குங்குமப்பூ
ஜம்மு காஷ்மீரில் குங்குமப்பூ புரட்சியை ஏற்படுத்த வேண்டும். குங்கும்ப்பூ விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அன்பு
இங்கு தொழில் நிறுவனங்கள், கல்வி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். நான் இந்த இடம் மற்றும் மக்கள் மீது அன்பு வைத்துள்ளேன். இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்க வேண்டும்.

ஸ்ரீநகர்
நான் ஸ்ரீநகரில் வசி்த்துள்ளேன். தற்போது நான் உங்கள் வாழ்வில் இருக்கும் இருளை அகற்ற விரும்புகிறேன். லே மக்களின் நாட்டுப்பற்று இந்திய மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

ஊழல்
நிதி பற்றாக்குறை எல்லாம் இல்லை. ஆனால் நாட்டை ஊழல் கெடுத்துள்ளது. வறுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. நாம் ஊழலை எதிர்த்து போராடினால் வறுமையை வென்றுவிடலாம்.

வருமானம்
கடலை விற்பவர், டீ விற்பவர், குதிரைக்காரர், ஏழைகள் சுற்றுலாத் துறை மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்றார் மோடி.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications