போஸ் கொடுக்க தலித் வீடுகளுக்குப் போகும் ராகுல்- ஆம் ஆத்மி தாக்கு
அமேதி: மகாராணி போல செயல்படுகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. அவரது மகனோ தலித் வீடுகளுக்குப் போய் சாப்பாடு சாப்பிட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வெளியிடுகிறார் என்று தாக்கியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ்.
அமேதி தொகுதிக்கு இன்று விஜயம் செய்து பேசியபோது இப்படிக் கூறினார் விஸ்வாஸ். ஆம் ஆத்மி சார்பி்ல் வரும் தேர்தலி்ல் அமேதி தொகுதியில் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பேச்சின்போது ராகுல் காந்தியையும், சோனியா காந்தியையும் அவர் கடுமையாக சாடிப் பேசியதால், அமேதியில் அவர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அமேதி தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி என்பது நினைவிருக்கலாம்.

தலித் வீடுகளுக்குப் போய் போஸ் கொடுக்கிறார் ராகுல்
நான் மற்ற தலைவர்களைப் போல, தலித் வீடுகளுக்குப் போய் சாப்பாடு சாப்பிடுவது போல டிவி, பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்க மாட்டேன்.

ஜோக்கர்தான் நல்லவன்
என்னை ஜோக்கர் என்கிறார்கள். ராகுல் காந்தியை எதிர்த்து ஒரு ஜோக்கர் போட்டியிடுவதா என்று கிண்டலடிக்கிறார்கள். ஜோக்கர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஜோக்கர்கள், நாட்டை விற்க மாட்டார்கள்.

மகாராணி சோனியா காந்தி
சோனியா காந்தி மகாராணி போல செயல்படுகிறார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக பலமுறை போய் வந்துள்ளார்.

எப்படி உங்களது மகனை நம்புவது...
நமது நாட்டு டாக்டர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கையில் நாம் எப்படி அவரது மகனை நம்புவது...

சவாலை சந்திப்போம்
அமேதியில் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம். எங்களுக்கு சவால் விட்டுள்ளனர். அதை சந்திப்போம். உயிருடனோ அல்லது பிணமாகவோதான் இந்த தொகுதியை விட்டு நாங்கள் போவோம். போட்டியிடுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications