காங்கிரஸ் என்னை கொடுமைப்படுத்தியது.. நான் திருப்பி கொடுப்பேன்.. பாஜகவில் இணைந்த சாத்வி சபதம்!
காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீசார் தன்னை ஜெயிலில் கொடுமைப்படுத்தினார்கள் என்று மலேகான் குண்டுவெடிப்பில் சிறை சென்ற சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.
போபால்: காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீசார் தன்னை ஜெயிலில் கொடுமைப்படுத்தினார்கள் என்று மலேகான் குண்டுவெடிப்பில் சிறை சென்ற சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார். இவர் பாஜக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இதில் கைது செய்யப்பட்டவர்தான் இந்து சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர். இவர் மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

பெயிலில் வந்தார்
இதையடுத்து உடல் நலம் சரியில்லை என்று கூறி பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இவர் பாஜகவில் இணைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் இவர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். போபால் தொகுதியில் இவர் களமிறங்குகிறார்.
லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

என்ன பேட்டி
இந்த நிலையில் இதுகுறித்து சாத்வி தற்போது பேட்டி அளித்து இருக்கிறார். அதில் என் மீது காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறது. அதை பொய் என்று நிரூபித்து நான் சிறையில் இருந்து முழுமையாக வெளியே வருவேன். என்னை காங்கிரஸ் படுத்திய கொடுமைகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

காங்கிரஸ் எப்படி
காங்கிரஸ் உத்தரவின் பேரில் நான் முறைகேடாக கைது செய்யப்பட்டேன். என்னை 13 நாட்கள் அடைத்து வைத்து கொடுமை படுத்தினார்கள். தினமும் என்னை மோசமாக தாக்கினார்கள். இதை எல்லாம் நான் மறக்க மாட்டேன். நான் செய்யாத குண்டுவெடிப்பு சம்பவத்தை என் மீது போட்டு, எனக்கு முடிவு கட்ட பார்த்தார்கள்.

இந்து காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறுகிறது. நான் ஒரு இந்து சாமியார் என்பதால் என்னை இப்படி கொடுமை படுத்துகிறார்கள். அவர்களுக்கு மக்கள்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நான் பட்ட துன்பங்களை எந்த விதமான சகோதரியும் வாழ்க்கையில் பட கூடாது என்று, சாத்வி குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications