For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனுமார் வாலில் வைத்த தீ மாதிரி மோடி போகுமிடமெல்லாம் கலவரம்: மமதா காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: அனுமார் வாலில் வைத்த தீ இலங்கையை எரித்தது போல நரேந்திர மோடி போகும் இடமெல்லாம் கலவரம் ஏற்படுகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கும் மமதா பானர்ஜிக்கும் இடையேயான வார்த்தை போர் உச்சத்தை அடைந்துள்ளது. மமதாவை நரேந்திர மோடி, பிசாசு என்று சாடினார். அதற்கு பதிலடியாக மோடி ஒரு காகிதப் புலி என்றார்.

பின்னர் மேற்கு வங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை மூட்டை முடிச்சுகளோடு திருப்பு அனுப்புவோம் என்றார் மோடி. இதற்கு பதிலடி கொடுத்த மமதா, இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் ஜெயிலில் கட்டிப்போட்டுவிடுவோம் என்றார்.

ஜெயிலில் போடுங்க..

ஜெயிலில் போடுங்க..

இதற்கும் பதிலடி கொடுத்த மோடி, சிறையில் போட்டாலும் பரவாயில்லை..அங்கே வங்க மொழி கற்றுக் கொள்வேன் என்று கூறினார்.

நீங்க கழுதையா?

நீங்க கழுதையா?

இந்நிலையில் மமதா தமது பங்குக்கு மோடியை, நீங்க என்ன ஒரு கழுதையா? என்று சாடியுள்ளார்.

அனுமார் வாலில் தீ

அனுமார் வாலில் தீ

அத்துடன் அனுமார் வாலில் வைக்கப்பட்ட தீ, இலங்கையை எரித்தது. அதேபோலத்தான் மோடி போகும் இடமெல்லாம் கலவரம் பற்றி எரிகிறது என்றும் சாடியுள்ளார் மமதா.

பெருந்தன்மை..

பெருந்தன்மை..

அத்துடன், நரேந்திர மோடியை பெருந்தன்மையுடன் இந்த மண்ணில் பிரசாரம் செய்ய அனுமதித்துள்ளோம்.

திருப்பி அனுப்பிவிடுவோம்..

திருப்பி அனுப்பிவிடுவோம்..

நான் நினைத்தால், வங்க மண்ணை மிதிக்க விடாமலேயே அப்படியே விமானத்திலேயே மோடியை திருப்பி அனுப்பிவிடவும் முடியும் என்றும் காட்டமாக மமதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
The war of words between West Bengal Chief Minister Mamata Banerjee and her Gujarat counterpart Narendra Modi hit a new low on Wednesday when the former called the BJP prime ministerial nominee a 'donkey' "We are allowing Modi to campaign in Bengal is our courtesy, we could have sent him back packing from the airport," said Mamata at the public meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X