For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஸ்டர் பிளான்.. உத்தரகாண்டில் வேகமாக நிலம் வாங்கிய இந்திய விமானப்படை..சீனாவிற்கு எதிராக செம வியூகம்

லடாக்கில் சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் இந்தியா விமானப்படை தற்போது அவசரமாக உத்தரகாண்டில் நிலப்பகுதி ஒன்றை வாங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

டேராடூன்: லடாக்கில் சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் இந்தியா விமானப்படை தற்போது அவசரமாக உத்தரகாண்டில் நிலப்பகுதி ஒன்றை வாங்கி உள்ளது.

Recommended Video

    China-வை Uttarakhandலிருந்து குறி வைக்க இடம் வாங்கிய IAF | Oneindia Tamil

    லடாக் மோதல் இப்போது முடிய வாய்ப்பில்லை இன்னும் பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். எல்லையில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் இந்த அமைதி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

    ரஷ்யாவில் நடந்த இந்திய - சீன அமைதி பேச்சுவார்த்தையில் செய்யப்பட்ட 5 உடன்படிக்கை கொண்ட ஒப்பந்தம் மூலம் எல்லையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. எல்லையில் நிலைமை மொத்தமாக சரியாக இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று கூறுகிறார்கள்.

    எல்லையில் பதற்றத்தை தணிக்க.. 5 உடன்படிக்கைகளை ஏற்க தயார்.. பணிந்தது சீனா!எல்லையில் பதற்றத்தை தணிக்க.. 5 உடன்படிக்கைகளை ஏற்க தயார்.. பணிந்தது சீனா!

    படைகள் குவிப்பு

    படைகள் குவிப்பு

    இதனால் எல்லையில் இரண்டு நாட்டு படைகளும் தயார் நிலையில் இருக்கிறது. லடாக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. எப்போது வேண்டுமானாலும் அத்துமீறல் நிகழலாம் என்று இந்தியா தனது எல்லையில் தயாராக இருக்கிறது. சீனாவும் எல்லையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்து உள்ளது. இதனால் அங்கு நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    பதற்றம் அதிகரிக்கிறது

    பதற்றம் அதிகரிக்கிறது

    அதேபோல் லடாக்கில் இரண்டு படைகளும் தங்கள் விமானங்களை குவித்து வருகிறது. லடாக் அருகே சீனா இரண்டு விமான படைத்தளங்களை அமைத்து உள்ளது. இந்த விமான படைத்தளங்களில் சீனா போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்தியாவும் அம்பாலா படைத்தளம் தொடங்கி லடாக் படைத்தளம் வரை அனைத்து படைத்தளங்களிலும் போர் விமானங்களை குவித்து உள்ளது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இந்தியா சீனா இடையே மோதல் வந்தால் அது பெரும்பாலும் விமானப்படை சார்ந்த போராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இரண்டு நாட்டு விமான படைகளும் தீவிரமாக மோதலுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவும் வேகமாக ரபேல் உள்ளிட்ட போர் விமானங்களை வாங்கவும், ஹைப்பர் சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை சோதனை செய்யவும் இதுவே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

    என்ன செய்தது இந்தியா

    என்ன செய்தது இந்தியா

    இந்த நிலையில்தான் தற்போது இந்தியா விமானப்படை உத்தரகாண்டில் திடீரென பெரிய நிலப்பரப்பு ஒன்றை வாங்கி உள்ளது. சீனாவின் எல்லைக்கு அருகே இந்த நிலப்பகுதியை இந்திய விமானப்படை வாங்கி உள்ளது. நேபாளம் மற்றும் சீனாவுடன் இந்தியா தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் இந்திய விமானப்படை இந்த நிலப்பகுதியை வாங்கி உள்ளது.

    நிலப்பகுதி

    நிலப்பகுதி

    உத்தரகாண்டில் ரேடார் கருவிகள் மற்றும் ஏவுகணைகளை நிறுவ இந்த பகுதியை இந்தியா வாங்கி உள்ளது. அவசரமாக சிறிய ஓடுதளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி உத்தரகாண்டில் இருக்கும் சமோலி , பிதோகார்க், உத்தரகாசி ஆகிய இடங்களில் இந்தியா ஓடுதளம் அமைக்க உள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய விமானப்படை விமானங்களை தரையிறக்க வசதியாக இந்த ஓடுதளங்களை அமைக்க உள்ளனர்.

    விமான நிலையம்

    விமான நிலையம்

    அதேபோல் உத்தரகாண்டில் இருக்கும் பாண்ட் நகர், ஜாலிகிராண்ட், பிதோகார்க் விமான நிலையங்களை விரிவாக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உத்தரகாண்டில் இந்திய விமானப்படை அதி நவீன ரேடார்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இங்கு சீனாவின் போர் விமானங்கள் எல்லை மீற வாய்ப்புள்ளது.

    வாய்ப்பு இருக்கிறது

    வாய்ப்பு இருக்கிறது

    எல்லையில் லடாக், அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய பகுதிகளுக்கு அடுத்து சீனா குறி வைக்கும் பகுதிதான் உத்தரகாண்ட். இங்கு சீனா எப்போது வேண்டுமானாலும் அத்துமீற வாய்ப்புள்ளது. இதனால் தற்போது உத்தரகாண்டில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் பொருட்டே உத்தரகாண்ட் எல்லையில் இந்திய விமானப்படை நிலம் வாங்கி உள்ளது என்கிறார்கள்.

    English summary
    IAF buys land in Uttarakhand border to act against China's PLA incursion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X