பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப்படை வீரர் கைது!
டெல்லி: பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட விமானப் படை அதிகாரி சுனில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி ரகேஷ் காஷல் என்ற அதிகாரி கூறியதாவது:
ஜோத்பூரை சேர்ந்த சுனில் குமார் என்ற விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 10 நாள் போலீஸ் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
விமான படையின் சைபர் குழு, சுனில் குமாரின் இணைய நடவடிக்கைகளை கண்காணித்தது. அதில் அவர் பாகிஸ்தானை சேர்ந்த மீனா ரெய்னா என்ற பெயர் கொண்ட ஒரு மின் அஞ்சலுக்கு ரகசிய தகவல்களை அனுப்பியது கண்டறியப்பட்டது.
இதனடிப்படையில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை சேர்ந்த மீனா ரெய்னா என்ற அந்த பெண் முதலில் சுனில் குமாரை தொடர்பு கொண்டு முதலில் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பிறகு அவர் அளிக்கும் தகவல்களுக்கு அவருக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு ரகேஷ் காஷல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications