எதிர்க்கட்சி தலைவர் பதவி மறுக்கப்பட்டால் வழக்கு தொடர சோனியா திட்டம்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 44 தொகுதிகளே கிடைத்தன. எதிர்க்கட்சியாக ஒரு கட்சிக்கு மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் 10 சதவீத இடங்களையாவது கைப்பற்றுவது அவசியம் என்பது விதிமுறை. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 54 தொகுதிகளையாவது வென்றால்தான் இந்த கணக்கு சரியாகும். இதனால் எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றமாக தற்போதைய நாடாளுமன்றம் காட்சியளிக்கிறது.
ஆனால் தனிப்பட்ட ஒரு கட்சியில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ளது காங்கிரஸ்தான் என்பதால் எங்களுக்குதான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால் கோபமடைந்துள்ள காங்கிரஸ், இதுதொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அந்தஸ்து இருந்தால்தான் ஓரளவுக்காவது மக்களிடம் காங்கிரசுக்கு செல்வாக்கை ஈட்ட முடியும், அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாதிட்டு மக்களிடம் நல்ல பெயர் பெற முடியும் என்பது காங்கிரசின் திட்டமாக உள்ளது. இதை தடுப்பது பாஜகவின் முயறச்சியாக உள்ளது.
இதனிடையே போபால் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், 10 சதவீத சீட்டுகளை பிடித்தால்தான் எதிர்க்கட்சியாக ஒரு கட்சியை அங்கீகரிக்க முடியும் என்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர சட்டத்திருத்தம் தேவை என்று கூறினார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications