எங்களிடம் பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானில் இருந்து இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதை தவிர்க்க இந்தியா முடிவெடுத்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: ஈரானில் இருந்து இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதை தவிர்க்க இந்தியா முடிவெடுத்து இருக்கிறது. இந்த பிரச்சனை காரணமாக, இருநாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஈரானுக்கு அமெரிக்காவிற்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை முற்றி இருக்கிறது. ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அணு ஆயுதம் வைத்து இருப்பதாக கூறி, ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யாது. அதேபோல் மற்ற நாடுகளையும் இறக்குமதி செய்ய கூடாது என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈரானில் இருந்து அதிக அளவில் பெட்ரோல், டீசல் வாங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்தது.
இதையடுத்து தற்போது அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இப்போது அறிக்கை சென்றுள்ளது.
இதுதான் தற்போது இரண்டு நாட்டு உறவுகளுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஈரான் தற்போது இந்தியாவிற்கு இந்த பிரச்சனையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா எங்களிடம் இருந்து பெட்ரோல் வாங்கவில்லை என்றால், இந்தியாவிற்கு இதுவரை பொருளாதார ரீதியா அளித்த சலுகைகளை திரும்ப பெறுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் பெட்ரோலிய பொருட்களை வாங்க ஈரானில் இருக்கும் துறைமுகத்தையும், ஈரானின் கடல் மார்க்கத்தை பயன்படுத்த விடமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மிகவும் முக்கியமாக பாகிஸ்தானுக்கு மிகவும் குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வழங்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications