வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால்.. மோடி தோற்றிருப்பார்: ராகுல் காந்தி பேச்சு
லக்னோ: வாரணாசியில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் மோடி 2-3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருப்பார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து நிலையில், ஜூன் 9ம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இருப்பினும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதிலும் பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது முதல் இரண்டு சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர்தான் முன்னிலையில் இருந்தார். இதானல் மோடி தோற்றுவிடுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் மோடி முன்னிலை வகித்து வெற்றி பெற்றார். இருப்பினும் கடந்த 2 தேர்தல்களில் மோடி பெற்ற வாக்குகளை விட இந்த முறை கிடைத்த வாக்குகள் குறைவுதான். இந்த முறை 6,12,970 வாக்குகள் பெற்று 1,52,513 வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை தோற்கடித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி, வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் 2-3 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி தோற்றிருப்பார் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் நடபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, "அயோத்தியில் பாஜக தோற்றிருக்கிறது. அயோத்தியில் மட்டுமல்லா வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி 2-3 லட்சம் வாக்குக்ள வித்தியாசத்தில் தோற்றிருப்பாார். இதை நான் ஆணவத்துடன் கூறவில்லை. நாட்டு மக்கள் மோடியின் அரசியலுக்கு தாங்கள் எதிரானவர்கள் என்கிற செய்தியை அவருக்கு கொடுத்திருக்கின்றனர்.
அமேதி, ரேபரேலி உட்பட உத்தரப் பிரதேசத்தின் அனைத்து தொகுதி மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் நாட்டின் அரசியல் சாசனத்துடன் விளையாட முயன்றார்கள். எனவேதான் மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் என பெரும்பாலான மாநிலங்களில் நாங்கள் இணைந்து போட்டியிட்டோம்" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்த திமுக தலைமையிலான கூட்டணி 39+1 தொகுதிகளை வென்றது. அதேபோல, கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் 20ல் 19 தொகுதிகளை கைப்பற்றினர். முதல் முறையாக பாஜக சார்பில் ஒரு எம்பி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக ஆளும் உ.பியில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications