வாரணாசியில் பிரியங்கா? 3 லட்சம் வாக்குகளில் மோடி தோல்வி! ராகுல் ரிவஞ்ச்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. 2019இல் என்.டி.ஏ கூட்டணி மொத்தம் 352 தொகுதிகளை வென்றது. இம்முறை இந்தக் கட்சி 293 இடங்களைத்தான் கைப்பற்றியது.
ஆகவே கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் இருக்கவேண்டும் என்ற நிலையில் பாஜக 240 இடங்களைத்தான் பெற்றுள்ளது.

கடந்த 2019 தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்களைக் கொடுத்த மாநிலம் உபி. இந்தமுறை நிலைமை தலைகீழாக மாறியது. இந்தக் கட்சி வெறும் 33 இடங்களில்தான் வென்றுள்ளது.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த மோடி, தனது சொந்த மாநிலத்தை விட்டுவிட்டுத் தொடர்ந்து வாரணாசி தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார்.
பாஜகவின் கொள்கையே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதுதான். அந்த ராமர் கோயில் தேர்தலுக்கு முன்பாகவே கட்டி திறக்கப்பட்டது. இதை பாஜகவின் வெற்றி சின்னமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதைச் சாதித்துக் காட்டியதற்காக இம்முறை பாஜக உபியில் அதிக இடங்களை வெல்லும் என்று பாஜக கட்சித் தலைவர்கள் பலரும் பேசி வந்தனர்.
கடந்த 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முதல் 3 கட்டத்தில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்த நிலையில் 4 ஆம் கட்டத்தில்தான் முன்னிலை பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் பிரதமர் மோடிக்கு 36424 வாக்குகள் கிடைத்தன. 619 வாக்குகள் அவர் முன்னிலை பெற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய்க்கு 35805 வாக்குகள் கிடைத்தது.
அதன் பின்னர் 4 கட்ட எண்ணிக்கையின் போது மோடி பின்னடைவிலிருந்து முன்னிலையைப் பெற்றார்.
கடந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, மொத்தம் 674,664 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார்.
சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி 195,159 வாக்குகளைப் பெற்றார். அப்போது காங்கிரஸ் அஜய் ராய் 152,548 வாக்குகளைப் பெற்றார்.
கடந்த 2014இல் 581,022 வாக்குகளை மோடி வாங்கி இருந்தார். அவரது வாக்கு சதவீதம் 56.37% ஆக இருந்தது. அதேபோல் 2019இல் மோடி பெற்ற வாக்குகளை 674,664 அவர் பெற்றார். கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு மேலாகா கூடுதல் வாக்குகளைப் பெற்றார். அப்போது 63.62%. வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்த 2024 தேர்தலில் மோடியின் வாக்குகள் குறைந்துள்ளன. 612,970 வாக்குகளைத்தான் அவர் பெற்றுள்ளார். இந்த முறை 54.24% தான். சுமார் 60 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன.
ஆகவே இந்தப் பின்னடைவை யாருமே எதிர்பார்க்கவே இல்லை. இது உலகளவில் மோடியின் செல்வாக்கை அசைத்துப் பார்த்துள்ளது. இது பற்றி நியூயார்க் டைம் ஒரு கட்டுரை எழுதியது. அதில், 'மோடிக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் குறைய தொடங்கிவிட்டதாக' கூறியுள்ளது.
இந்நிலையில்தான் வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டிப் போட்டியிருந்தால், நிலைமையே தலைகீழாக மாறி இருக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ரேபரேலி 'ஆபர் சபா'வில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால், பிரதமர் நரேந்திர மோடியை அவர் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பார்" எனக் கூறினார்.
மேலும் அவர், "வாரணாசி மே எனது சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 அல்லது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடியைத் தோற்கடித்திருப்பார். கடந்த காலங்களில் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டோம்.
ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பில் பிரச்சினைகள் இருந்தன. இந்த முறை சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். தோழமை கட்சி தொண்டர்கள் நல்ல ஒத்துழைப்பை அளித்தார்கள். ஆகவே அவர்களுக்கு என் நன்றி.
இந்த மாநிலத்தில் மட்டும் இல்லை; நாடு முழுவதும் காங்கிரசுடன் கூட்டணி வைத்த கட்சியின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர். எனவே நான் அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.
ஜனநாயக விழுமியங்களுக்கு பாஜக அச்சுறுத்தல்கள் கொடுத்து வருகின்றது என நாங்கள் சொன்னோம். அதை தொண்டர்கள் சரியாக உணர்ந்துகொண்டனர். இந்த ஒற்றுமைக்கு அதுவே காரணம்" என்றார் ராகுல்.
நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அரசியல் சாசனத்துடன் விளையாட முயன்றார்கள் என்பதை நாடு உணர்ந்ததால்தான் இது நடந்தது என்றவர், "பிரதமர் மோடி மிக வெளிப்படையாக வெறுப்பு மற்றும் வன்முறை அரசியலைத் தூண்டினார். நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். இது இந்தியக் கலாச்சாரத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானது" என்றார்.
அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிஷோரி லால் ஷர்மாவை பாராட்டிய ராகுல், "பாதகமான சூழ்நிலையை எதிர்த்துப் போராடி, கட்சித் தொண்டர்களைக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஒருங்கிணைத்தார். ஆகவே அவரைப் பாராட்டுகிறேன்.
மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் ராகுல் வெற்றி பெற்ற பிறகு, பிரியங்கா, ராகுல் ஆகிய இரண்டு தலைவர்களும் முதல் முறையாக இந்தத் தொகுதிக்குச் சென்றிருந்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications