மோடி பிரதமரானால் நாடு தாங்காது...: பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்: மோடி பிரதமரானால் நாட்டையே அழித்து துவம்சம் செய்து விடுவார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா. அதன்படி நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ள அனந்த்நக் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பாஜகவையும், அக்கட்சியின் பிரதம வேட்பாளரான நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார். மோடி பிரதமரானால் நாட்டிற்கு அழிவு நிச்சயம் என அவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமர் பதவியில் அமர்ந்தால் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்து விடும். அனைத்து மதங்களையும் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டு விடும்.
கட்சியின் பிற மூத்தத் தலைவர்களை ஓரம் கட்டிய மோடியா என்னையோ அல்லது உங்களையோவா மதிக்கப் போகிறார். சிலர் காங்கிரஸ் அல்லது எங்கள் கட்சியினரால் பாதிப்படைந்திருக்கலாம் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் என்ன செய்தோம் அல்லது என்ன செய்யவில்லை என்பதைப் பற்றி சிந்திக்கும் நேரமல்ல இது. நாட்டைப் பற்றி சிந்திக்கும் நேரம், நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தருணம்...' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications