என் பேச்சைக் கேட்காவிட்டால் அனைத்தையும் இழக்க நேரிடும்.. குடும்பத்தினருக்கு சசிகலா எச்சரிக்கை!
தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு தலைதூக்கி வரும் நிலையில் குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Recommended Video

பெங்களூரு: தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு தலைதூக்கி வரும் நிலையில் குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இனியும் என் பேச்சை கேட்காவிட்டால் நீங்கள் பெற்றுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பின்னர் தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. டிடிவி தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் தம்பி திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாள்தோறும் ஏதாவது பேசி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடையேயும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சசிகலாவின் தம்பி திவாகரன் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார் என்றும், அப்போது மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது என்றும் அந்த கழுகு அவருக்கு வேண்டியவருக்கு முதல்வர் பதவியை வாங்கி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தது என்றும் கூறினார்.

திவாகரனால் சூடான டெல்லி
திவாகரனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் கழுகு என திவாகரன் கூறியது குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவைதான் என உளவுத்துறை ரிப்போர்ட் அளிக்க, சூடாகியுள்ளதாம் மத்திய அரசு.

இளம் பாசறை தொடக்கம்
இந்நிலையில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், ‘‘மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் பணியகம்'' என்ற அமைப்பை பொங்கல் அன்று தொடங்கினார். அதிமுகவில் இயங்கி வரும் இளம் பாசறையினைப் போல அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.

யாரைக்கேட்டு ஆடுகிறார்கள்?
இவற்றையெல்லாம் தனது வழக்கறிஞர் மூலம் கேட்டறிந்த சசிகலா சிறையிலேயே ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். யாரைக்கேட்டு இப்படி ஆடுகிறார்கள்? என்ன நடக்கிறது வெளியே என இளவரசியிடம் பொறிந்து தள்ளியுள்ளார் சசிகலா.

சசி எழுதிய கடிதம்
தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கணவர் நடராஜன, தம்பி, தம்பி மகன், தினகரன் என அனைத்து உறவுகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து அனுப்பி உள்ளாரம். அதில், கடுமையான வார்த்தைகளை சசிகலா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை ரிப்போர்ட்
மேலும் ஏற்கனவே மக்கள் மத்தியில் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தை ஒரு குடும்பம் கைப்பற்றி கட்டுக்குள் வைத்துக் கொண்டு இருப்பதாகவும், குடும்ப அரசியல் செய்துள்ள சசிகலா தமிழகம் முழுவதும் ஊருக்கு ஒருவரை தலைமையாக்கி கட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது.

உள்ளேயே கிடக்க வேண்டியதுதான்
இதன் பின்னணியில்தான் ரெய்டு உள்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் சொல்வது போல ஆளாளுக்கு நீங்கள் இப்படி ராஜ்ஜியம் செய்து வந்தால் நான் காலம் முழுவதும் உள்ளேயே கிடக்க வேண்டியதுதான் என்று வேதனையை கொட்டியுள்ளார் சசிகலா.

நான் கட்டிய கோட்டையை..
இதற்காகவா நான் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டேன் என்றும் சசிகலா உருகியுள்ளாராம். மேலும் நான் கட்டிய கோட்டையை நீங்களே சரிப்பது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளாராம் சசிகலா.

யாரிடமும் எதையும் பேசக்கூடாது
இனிமேல் யாரும் தேவையில்லாமல் மீடியாவை சந்திக்க வேண்டாம். தேவையில்லாமல் யாரிடமும் எதையும் பேச வேண்டாம் என்றும் கட்டளையிட்டிருக்கிறாராம் சசிகலா.

அனைத்தையும் இழக்க நேரிடும்
இதற்கு மேலும் நீங்கள் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் நீங்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சசிகலா தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார். இந்தக் கடிதம் சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் உள்பட சசிகலாவின் குடும்பத்தில் கோலோட்சும் முக்கிய நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications