மறுபடியும் பேசறதைப் பார்த்தேன்... "கட்" பண்ணிருவேன்... ஆபாச ஆர்.கே.பச்சோரி!
டெல்லி: என்னைத் தவிர வேறு எந்த ஆணிடமும் பேசக் கூடாது காதலிக்கவும் கூடாது. மீறி செய்தால், அவனுக்கு "கட்" செய்து விடுவேன் என்று தன்னை ஆர்.கே.பச்சோரி மிரட்டியதாக அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் கூறியுள்ளார்.
ஆர்.கே.பச்சோரி, தேரி எனப்படும் தி எனர்ஜி அன்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ஜெனரலாக இருந்தபோது அவர் தனக்கு பாலயில் தொந்தரவுகள் கொடுத்தார் என்று கூறி தேரியின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எப்படியெல்லாம் தன்னிடம் பச்சோரி நடந்து கொண்டார் என்பதை தற்போது அப்பெண் ஊழியர் விவரித்துள்ளார்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அப்பெண் பச்சோரியின் குணம் எப்படி இருந்தது என்பதை அப்பெண் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், 2014ம் ஆண்டு மெக்சிகோவில் உள்ள லாஸ் கேபோஸ் என்ற இடத்தில் நடந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம். அப்போது விமானத்தில் சக ஆண் ஊழியரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன்.
அதைப் பார்த்த பச்சோரி என்னை அழைத்து உனக்கு யாராவது பாய் பிரண்ட் இருந்தால் உடனே மறந்து விடு. மறுபடியும் பார்த்தேன், அவனுக்கு "கட்" (castrate) செய்து விடுவேன் என்று கோபத்துடன் கூறவே நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.
2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் என்னை கட்டாயப்படுத்தி முத்தமிட்டார். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிட்டர்ன் டு அல்மோரா என்ற நூலை என்னிடம் கொடுத்தப் படிக்கச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். அது ஆபாச வார்த்தைகள் நிரம்பிய நூலாகும்.
தேரியில் வேலை பார்க்கும் பல பெண் ஊழியர்களிடம் பேசுகையில் அவர்களை என் கண் முன்பாகவே ஆபாசமாக வர்ணிப்பார் என்று கூறியுள்ளார் இப்பெண்.
இவர்தான் பச்சோரி மீது முதலில் பாலியல் புகார் கூறியவர். சமீபத்தில் இன்னொரு பெண்ணும் புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முதல் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து தேரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பச்சோரி. சமீபத்தில்தான் அவர் மீண்டும் தேரி பதவிக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் 2வது பெண்ணின் புகார் வரவே அவர் தற்போது காலவரையற்ற விடுமுறையில் போய் விட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications