ஐஐடி டெல்லி இயக்குநர் குறித்த சர்ச்சை.. சில உண்மைகள்!
டெல்லி: டெல்லி ஐஐடி இயக்குநர் ரகுநாத் கே. செவ்கோங்கர் தொடர்பான சர்ச்சை கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் அடிபட்டதால் சர்ச்சை பெரிதாகி விட்டது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் பெயரை தேவைில்லாமல் இழுத்து விட்டது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைதான். இதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பும் கேட்டு விட்டது. சச்சினும் தன் மீதான புகார்களை உடனடியாக மறுத்து விட்டார்.

டெல்லி ஐஐடி வளாகத்தில் கிரிக்கெட் அகாடமியைத் தொடங்க சச்சின் விரும்பினார் என்றும், இதற்காக நிலம் கேட்டார் என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா கதையைக் கிளப்பி விட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று பின்னர் டைம்ஸே மறுத்து விட்டது.
அதேபோல சேகர் குப்தா, வரதராஜன் ஆகியோர் கிளப்பிய சில கேள்விகளும் சர்ச்சையைப் பெரிதாக்கி விட்டன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது.. ஒரு பார்வை.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு மற்றும் மொரீஷியஸ் அரசுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஐஐடி டெல்லி மற்றும் மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் அது. அந்த ஒப்பந்தமானது, வீடியோ கான்பரன்சிங் மூலமாக மொரீஷியஸ் பல்கலைக்கழகத்திற்கு டெல்லி ஐஐடி தேவையான ஆலோசனைகளை வழங்க இது வகை செய்கிறது.
அதன்படி,
1. இந்தத்திட்டத்தை அமலாக்க ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். அந்தக் குழு பல்வேறு திட்டங்களை குறித்த காலத்திற்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக மொரீஷீயஸ் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துக் கூறும்.
2 . மொரீஷீயஸ் ஐஐடி ஆய்வு அகாடமியின் இயக்குநரைத் தேர்வு செய்ய டெல்லி ஐஐடி உதவும்.
3. மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தின் ஆலோசனையின்படி, புதிய ஆய்வுக் கூறுகளை ஐஐடி மொரீஷியஸ் வகுக்கும்.
4. 2014ம் ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு மாணவர்கள் தங்களது ஆய்வுகளை இந்த அகாடமியில் தொடங்குவார்கள்.
ஐஐடி டெல்லி இயக்குநர் தொடர்பான சர்ச்சை வெடித்த நிலையில், மொரீஷியஸில் ஆய்வு மையத்தை மட்டுமே டெல்லி ஐஐடி அமைக்கவுள்ளது, மாறாக புதிய வளாகத்தை அது ஏற்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் பல்லம் ராஜு கூறியதாக ஒரு ஏபிபி செய்தியளார் கூறியுள்ளார்.
அப்படியானால், மொரீஷியஸில் அமையவுள்ள ஆய்வு அகாடமியில், டெல்லி ஐஐடியின் பங்கு என்ன?. இதுதொடர்பாக நடந்த கூட்டத்தின்போது பேசியவர்களின் பேச்சுக்களை மொரீஷியஸ் நாட்டு அமைச்சர் ஒருவர் தனது பிளாக்கில் முழுமையாக போட்டுள்ளார். அதில் ஐஐடி டெல்லியின் இயக்குநரும் கலந்து கொண்டு பேசியதும் இடம் பெற்றுள்ளது.
அந்த பேச்சின் அடிப்படையில், 5 ஆண்டு காலத்திற்கு மொரீஷியஸ் ஐஐடி ஆய்வு அகாடமியை டெல்லி ஐஐடியே நடத்தும் என்று தெரிய வருகிறது. 6 வது ஆண்டிலிருந்து அந்த ஐஐடி சுயேச்சையாக இயங்கத் தொடங்கும் என்றும் அந்தப் பேச்சுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இப்படிப்பட்ட சுயேச்சையான இயக்கம் குறித்த உறுதிமொழியை மத்திய அரசின் அனுமதியில்லாமல் ஐஐடி டெல்லி எப்படிக் கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரகுநாத் செவ்கோங்கர் இதுதொடர்பாக மொரீஷியஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது....
முதலில் நாங்கள் பிஎச்டி மாணவர்களை ஐஐடி டெல்லியில்தான் பதிவு செய்வோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அகாடமியில் பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியர்களுக்கு டெல்லி ஐஐடியின் டிகிரிதான் கொடுக்கப்படும். இந்த மாணவர்கள், தங்களது பெரும்பாலான நேரத்தை, ஆய்வுகளை மொரீஷியஸில்தான் கழிப்பார்கள். குறிப்பிட்ட ஆய்வுக்காக மட்டுமே அவர்கள் டெல்லிக்கு வருவார்கள். டெல்லியில் அவர்கள் பயிலும்போது டெல்லி ஐஐடி பேராசிரியர் மற்றும் மொரீஷியஸ் பேராசிரியர் ஒருவர் அவர்களைக் கண்காணிப்பார்கள். ஆய்வு முடிந்ததும் பட்டத்தை டெல்லி ஐஐடியே வழங்கும்.
டெல்லி ஐஐடி இயக்குநர் தகுதியுடன் கூடிய ஒருவர்தான் மொரீஷியஸ் அகாடமியில் பிராந்திய இயக்குநராக இருப்பார்.
மொரீஷியஸ் அகாடமியில் ஆசிரியர்ககள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும், தொடக்கத்தில், ஐஐடி டெல்லியிலிருந்து அதிக அளவிலான ஆசிரியர்கள் இங்கு விசிட்டிங் ஆசிரியர்களாக செயல்படுவார்கள்.
மொரீஷியஸ் அகாடமியின் தலைவராக பிராந்திய இயக்குநரே செயல்படுார். மேலும் முக்கிய முடிவுகளை எடுக்க இரு தரப்பும் இணைந்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இதில் டெல்லி ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு சமமான ஒருவர் உறுப்பினராக இருப்பார். முடிவுகள் அனைத்தும் பிராந்திய இயக்குநரே மேற்கொள்வார். ஆரம்பத்தில் இந்த முடிவுகளை டெல்லி ஐஐடியே மேற்கொள்ளும். 2 வரடம் கழித்து செயல் இயக்குநர் ஒருவர் மொரீஷியஸில் நியமித்து அவர் அதைப் பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார் செவ்கோங்கர்.
இப்போது நம் முன் எழும் சட்டரீதியான ஒரு கேள்வி என்னவென்றால், டெல்லி ஐஐடி, மொரீஷியஸில் ஒரு கல்வி நிறுவனத்தை தன்னிச்சைப்படி, நடத்த முடியுமா, ஐந்து ஆண்டுகளுக்கு இங்கிருந்தபடியே மொரீஷியஸில் கல்வி நிறுவனத்தை அது நிர்வகிக்க முடியுமா என்பதுதான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications