ஐஐடி இயக்குநர் விலகல் சர்ச்சையில் என்னை இழுத்தது திகைப்பாக இருக்கிறது - சச்சின்
மும்பை: டெல்லி ஐஐடி இயக்குநர் ரகுநாத் கே செவ்கோங்கர் ராஜினாமா விவகாரத்தில் எனது பெயர் அடிபடுவது என்னை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
டெல்லி ஐஐடி இயக்குநர் ரகுநாத் தனது பதவியிலிருந்து விலகி விட்டார். மத்திய அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

அவர் பதவி விலக 2 காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று சச்சின் டெண்டுல்கர் ஆரம்பிக்கவுள்ள கிரிக்கெட் அகாடமிக்குத் தேவையான நிலத்தைத் தருமாறு அவருக்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திடமிருந்து நெருக்கடி வந்ததாக ஒரு தகவல் உலா வருகிறது.
I am appalled to read the stories that suggest some land has been asked from IIT-D for academy in my name.
— sachin tendulkar (@sachin_rt) December 28, 2014 இன்னொன்று சுப்பிரமணியன் சாமி டெல்லி ஐஐடியில் ஆசிரியராகப் பணியாற்றிய சமயத்தில் அவருக்கு பாக்கி வைத்துள்ள ரூ. 70 லட்சம் சம்பளப் பணத்தை அவருக்கு அளிக்குமாறு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூலமாக நெருக்கடி தரப்பட்டதாக கூறப்படுகிறது.
I have not even planned any academy neither do I want any piece of land for any purpose.
— sachin tendulkar (@sachin_rt) December 28, 2014 இந்த செய்திகள் வெளியானதுமே சச்சினும், சாமியும் இந்தப் புகாரை மறுத்து விட்டனர். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் டிவிட்டர் மூலம் விளக்கியுள்ளார்.
Wish that basic facts are checked from me before publishing such fiction using my name.
— sachin tendulkar (@sachin_rt) December 28, 2014 இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஒரு டிவிட்டில், நான் எனது பெயரில் கிரிக்கெட் அகாடமி அமைக்க டெல்லி ஐஐடியின் நிலத்தைக் கேட்டதாக வந்த செய்தியைப் பார்த்து நான் திகைத்துப் போயுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
இன்னொரு டிவிட்டில், நான் எனது பெயரில் எந்த கிரிக்கெட் அகாடமிக்கும் திட்டமிடவில்லை. எந்த நிலத்தையும், எதற்காகவும் நான் கேட்கவில்ல என்று கூறியுள்ளார்.
இன்னொரு டிவிட்டில், இதுபோன்ற கற்பனைச் செய்திகளைப் பிரசுரிக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சச்சின்.












Click it and Unblock the Notifications