மாயமான சென்னை ஐஐடி மாணவி டேராடூன் போலி சாமியாரின் ஆசிரமித்திலிருந்து மீட்பு
டேராடூன்: சென்னை ஐஐடியில் இருந்து மாயமான மாணவி பிரதியுஷா டேராடூன் அருகே போலி சாமியாரின் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பரோடிபேட்டையைச் சேர்ந்த வேதாந்தம் எல். பிரதியுஷா(26) என்பவர் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தவர் கடந்த மாதம் 17ம் தேதி திடீர் என்று மாயமானார்.
ஆன்மீக பாதையை தேடி இமய மலைக்கு செல்வதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது. அவர் கோவையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் மும்பைக்கு ரயிலில் சென்றதை சென்னை போலீசார் கண்டுபிடித்தனர்.
பிரதியுஷாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் டேராடூன் அருகே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் உத்தராஞ்சல் போலீசார் உதவியுடன் பிரதியுஷாவை தேடி இறுதியில் அவர் சிவ குப்தா என்பவரின் ஆசிரமத்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர். சிவ குப்தா தன்னைத் தானே ஒரு சாமியார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அவரின் ஆசிரமதித்தில் சிறுமிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் விரும்பி அங்கு இருப்பதால் போலீசார் குப்தா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பிரதியுஷாவின் தந்தை சென்னை போலீசாருக்கு போன் செய்து தங்கள் மகள் காணாமல் போனதாக அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications