நாடு முழுவதும் ஐ.ஐ.டி மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடங்கப்பட்டன பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம்!!
டெல்லி/மும்பை: சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார்-அம்பேத்கர் பெயரிலான அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி. மற்றும் பல்கலைக் கழகங்களில் பெரியார்- அம்பேத்கர் பெயரிலான மாணவர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த ஓராண்டாக பெரியார்- அம்பேத்கர் பெயரிலான மாணவர் வாசகர் வட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்த அமைப்பு பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள்கைகளை விமர்சிக்கிறது எனக் கூறி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு அனாமதேய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கடிதத்தின் அடிப்படையில் கருத்துகளைத் தெரிவிக்குமாறு சென்னை ஐ.ஐ.டி.க்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமானது பெரியார்-அம்பேத்கர் பெயரிலான மாணவர் வாசகர் வட்டத்துக்கு தடை விதித்தது.
இந்த தடை விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டிக்கு தெரிவிக்கும் வகையில் டெல்லி. மும்பை, கான்பூர் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் அம்பேத்கர்- பெரியார் பெயரில் மாணவர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஐஐடி மும்பையில் 'அம்பேத்கர்-பெரியார்-பூலே' பெயரில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜோதிராவ் பூலே, மகாராஷ்டிரா மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் பெரியார்-அம்பேத்கர் மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் அம்பேத்கர்-பெரியார் மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது

ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்களில் சென்னை ஐ.ஐ.டியின் தடைக்கு எதிராக தனிப் பக்கங்கள் தொடங்கப்பட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications