Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக் காதல் கேட்குதா.. கணவனை தோளில் தூக்கி ஊரை சுற்று.. பெண்ணுக்கு தண்டனை கொடுத்த ஊர் மக்கள்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணின் கழுத்தில் செருப்பு மாலை அணிந்து, ஆடைகளை கிழித்து பெல்ட்டால் கொடூரமாக தாக்கி கணவரை தோளில் சுமந்து கிராமத்தை சுற்றி வரச்செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டம் பழங்குடி கிராமத்தில் வசிப்பவர் 35 வயது பெண். இவருக்கும் இன்னொருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து தம்பதி தங்களின் 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இந்நிலையில் தான் சமீபத்தில் அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு நபருடன், இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அந்த பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்லாமல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெளியேறி தனியே வசிக்க தொடங்கினார்.

கள்ளக்காதலன் வீட்டில்...

கள்ளக்காதலன் வீட்டில்...

இது அவரது கணவரின் குடும்பத்துக்கு தெரியவில்லை. இதனால் அந்த பெண் மாயமானதாக கணவரின் குடும்பத்தினரால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தான் அந்த பெண் அதேகிராமத்தில் உள்ள கள்ளக்காதலன் வீட்டில் இருப்பதை கிராமத்தினர் அறிந்தனர். இதுபற்றி உடனடியாக அந்த பெண்ணின் கணவரின் குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது.

பெண்ணுக்கு கொடுமை

பெண்ணுக்கு கொடுமை

இதையடுத்து அங்கு சென்ற கணவரின் குடும்பத்தினர் அவரை கிராமத்தினர் முன்பு சரமாரியாக தாக்கினர். மேலும் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு தரையில் தடுமாறி விழுந்த அந்த பெண்ணை அவர்கள் தரதரவென இழுத்து சென்றனர். அதோடு அவரது கணவரை தோளில் சுமக்கும்படி கட்டாயப்படுத்தி கிராமத்தை சுற்றி வர செய்தனர். அப்போது அவர் மீது பெல்ட்டால் கொடூரமாக தாக்கினர். மேலும் அந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் செருப்பு மாலை அணிவித்து தொடர்ந்து தாக்கி கொடுமைப்படுத்தினர்.

கணவர் உள்பட 12 பேர் மீது வழக்கு

கணவர் உள்பட 12 பேர் மீது வழக்கு

இதனை பலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர். மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் உள்பட 12 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 354ஏ (பாலியல் தொல்லை) உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனால் அந்த பெண்ணின் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+