வங்கிகளில் புது நோட்டுகளை இப்படியும் வாங்கலாம் ...!
வங்கியில் சிலர் முறைகேடாக புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுச் செல்வது போன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வரிசையில் நின்று வாங்காமல் வங்கியின் பின்புறம் சென்றும் வாங்கலாமாம்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து அதை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கு மக்கள் தவம் கிடக்கின்றனர். ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியது.

அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 ஆக உயர்தியது. அதுவும் பணத்தை மாற்றுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அத்யாவசிய பொருட்கள், மருத்துவமனை செலவு மளிகை சாமான் என அன்றாட தேவைகளுக்காகவும் கையிலிருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள் முன்பு கால்கடுக்க காத்திருப்பது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.
இந்த நிலையில் சிலர் முறைகேடாக வங்கியில் பணத்தை மாற்றி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு எந்த நிபந்தையும் கிடையாதாம். அந்த வகையில் வட மாநிலம் ஒன்றில் வங்கியின் பின் பக்கத்தில் சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு திடீரென்று வங்கியின் உள்ளே இருந்து ஒரு சிக்னல் கிடைக்கிறது. சிக்னல் வந்தவுடன் வங்கியின் பின்னால் உள்ள ஜன்னலில் இருந்து வரும் பணத்தை வெடுக்கென பெற்றுக்கொண்டு ஒன்றும் தெரியாததைப்போல் செல்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாமலும், கையில் உள்ள பணத்தை செலவழிக்க முடியாமலும் சாதரண மக்கள் சிரமப்படும் நேரத்தில் இப்படியும் சிலர் மாற்றிச் செல்வது வேதனைக்குரியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications